திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரே கிஸ்ஸுக்கு வச்சி செய்த கமல்.. நடிகை எவ்வளவோ கெஞ்சியும் கேட்கல

Actor Kamal Haasan: உலகநாயகன் கமலஹாசனை சினிமாவில் அனைத்தும் கற்று தேர்ந்த ஞானி என்று எந்த அளவுக்கு சொல்கிறோமோ, அதே அளவுக்கு இவருடைய முத்த காட்சிகளும் பேர் போனவை. இவருடன் நடித்த பல நடிகைகள் இந்த முத்தக் காட்சியை பற்றி அதிகமாக பேசி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த காலத்தின் காதல் மன்னனாக இருந்த கமலஹாசன் முத்தத்தில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.

எந்த உணர்வு பூர்வமான காட்சிகளையும் தத்ரூபமாக நடிக்க வேண்டும் என நினைக்கும் கமல், முத்த காட்சியிலும் அப்படியே தான் செய்வார். இதனாலேயே பல நடிகைகள் கமலுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தாலும் வேண்டாம் என்று ஒதுக்கி விடுவார்கள். இது போன்ற காட்சிகளில் நடித்து விட்டால் பின்னர் ரசிகர்களிடம் கெட்ட பெயர் வந்துவிடும் என்ற பயத்தில் தான் நடிகைகள் கமலுடன் நடிப்பதில்லை.

Also Read:ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு பெண் வேடத்தில் நடித்த 5 நடிகர்கள்.. ஜெமினிகணேசனை காதலிக்க தூண்டிய அவ்வை சண்முகி

90களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்த நடிகை ஒருவர் கமலுடன் நடிக்கும் வாய்ப்பு வந்த போது, எதையும் பற்றி யோசிக்காமல் ஓகே என சொல்லி இருக்கிறார். அதன் பின்னர் இயக்குனர் ஒருநாள் ஷூட்டிங் என்பது அடுத்து உங்களுக்கும் கமலுக்கும் முத்த காட்சி ஒன்று இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். கமலுடன் அடிக்க ஆசைப்பட்டு, இதுபோன்ற காட்சிகள் அவருடைய படத்தில் வரும் என்பதே மறந்து விட்டோமே என கதறி அழுது இருக்கிறார் அந்த நடிகை.

அன்றைய காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்த மீனா தான் அந்த நடிகை. மீனா, அவ்வை சண்முகி வாய்ப்பு வந்தபோது கமலுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சரி என்று சொல்லி இருக்கிறார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு நாள் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் வந்து அடுத்து முத்த காட்சி இருக்கிறது அதுக்கு தயாராகுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்.

Also Read:ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு.. ரஜினியை ஒதுக்கி கமலை மட்டும் வளர்த்து விட்ட பாலச்சந்தர்

மீனாவுக்கு அப்போதுதான் கமலின் மீது இருக்கும் இந்த முத்த சர்ச்சை ஞாபகம் வந்திருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து, நடுங்கிப் போயிருக்கிறார். கேரவனுக்குள் சென்று பயங்கரமாக அழுத மீனா தன்னுடைய அம்மாவிடம், அம்மா நான் இந்த காட்சியில் நடிக்கவே மாட்டேன், நீங்கள் எப்படியாவது இயக்குனரிடம் பேசி முடியாது என்று சொல்லிவிடுங்கள் என்று சொல்லி கதறி இருக்கிறார்.

மீனாவின் அம்மாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதற்குள் இயக்குனர் ஸ்பாட்டிற்கு கூப்பிட்டு, நீங்கள் போய் அந்த பெட்டில் படுங்கள் என்று சொல்லியிருக்கிறார். மீனாவும் பயந்து கொண்டே படுக்க, கமல் மீனாவின் உதட்டின் அருகே வரை மிக நெருக்கமாக வந்துவிட்டு இன்னைக்கு வேண்டாமே, என்ற வசனத்தை பேசியதோடு, அந்த காட்சி முடிக்கப்பட்டு இருக்கிறது. மீனாவுக்கு அப்போது தான் பயமும் போனதாம்.

Also Read:கமலை ஆதரித்து, ரஜினியை வளரவிடாமல் செய்த பாலிவுட்.. சூழ்ச்சிக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

Trending News