புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எந்தப் புத்துல எந்த பாம்பு இருக்குன்னு தெரியலையே.. மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனரை சந்தி சிரிக்க வைக்கும் நடிகை

Manjummel Boys: மலையாள படமான மஞ்சுமல் பாய்ஸ் தமிழ்நாட்டில் அதிகபட்ச வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த இப்படம் தற்போது கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் நல்ல விமர்சனங்களை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல் வாரத்திலேயே 50 கோடியை வசூலித்த மஞ்சுமல் பாய்ஸ் அடுத்த சில நாட்களிலேயே 100 கோடி வசூலை தட்டி தூக்கியது. அது மட்டுமின்றி ஒட்டுமொத்த பட குழுவும் இப்படத்திற்கு விதை போட்ட குணா நாயகனான ஆண்டவரை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து தனுஷ், உதயநிதி, விக்ரம் போன்ற பல பிரபலங்களும் இப்படத்தின் இயக்குனர் சிதம்பரத்தை மனமார பாராட்டி இருந்தனர். இப்படி ஓவர் நைட்டில் ஒபாமா ஆனது போல் அவர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். இது மட்டுமா எந்த சேனலை திறந்தாலும் இவருடைய பேட்டி தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

Also read: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தால் இளையராஜாவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

இந்நிலையில் இவருடைய முதல் படத்தில் நடித்த நடிகை பிராப்தி எலிசபெத் என்பவர் தற்போது பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் மஞ்சுமல் பாய்ஸ் என ஏன் வைக்க வேண்டும் மஞ்சுமல் கேர்ள்ஸ் வைக்கலாமே என பதிவிட்டு இருந்தார்.

prapti-elizebeth
prapti-elizebeth

அதற்கு கமெண்ட் கொடுத்த பிராப்தி படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய நண்பர்கள் பற்றி சொல்வதற்கு நிறைய நிறைய இருக்கிறது என பதிவிட்டு இருந்தார். அதை தொடர்ந்து என்ன என பலரும் கேட்ட நிலையில் அவர் சிதம்பரம் மீது மீ டூ புகாரையும் கிளப்பி இருக்கிறார். இதுதான் இப்போது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை பார்த்த நெட்டிசன்கள் எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ என கூறி வருகின்றனர். மேலும் சிலர் ஒருவர் பிரபலமாகிவிட்டால் இது ஒரு தொல்லை தான். எப்போது இப்படம் 100 கோடி வசூல் ஆகும் என்று காத்திருந்தீர்களா? இவ்வளவு நாள் கழித்து இதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என நடிகையை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

Also read: Manjummel Boys Movie Review- குணா குகையில் சாத்தானிடம் சிக்கிய 11 பேரின் நிலைமை என்னாச்சு? ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ அனல் பறக்கும் முழு விமர்சனம்

Trending News