Gossip: காதல், பிரேக் அப் எல்லாம் இப்போது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. அதிலும் திரை பிரபலங்கள் நினைத்தால் சேர்ந்து வாழ்வது இல்லை என்றால் பாய் சொல்லி பிரிவது என்ற கலாச்சாரத்தில் ஊறிப் போய் இருக்கின்றனர்.
அதில் இப்போது இருக்கும் பிரபலங்களுக்கு முன்னோடியாக இருப்பவர் தான் வேர்ல்ட் ஹீரோ. இரண்டு திருமணம் செய்து விவாகரத்தான இவர் எவர்கிரீன் நடிகையுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தார்.
ஆனால் அதுவும் பிரேக்கப்பில் முடிந்த நிலையில் இளம் நடிகை ஒருவருடன் நெருக்கம் காட்டினார். ஆனால் இப்போது ஹீரோ தனிமையில் தான் இருக்கிறார். அவரை போலவே அவருடைய மகளும் காதல் பிரேக் அப் என தன் போக்கில் வாழ்ந்து வருகிறார்.
அப்பாவை ஃபாலோ பண்ணும் வாரிசு
ஆரம்பத்தில் வெளிநாட்டு பிரபலம் ஒருவரை காதலித்த இவர் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு வந்தார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு மூன்று எழுத்து நடிகருடன் சேர்த்து இவர் கிசுகிசுக்கப்பட்டார்.
அது பஞ்சாயத்து ஆக மாறிய நிலையில் வேறு ஒருவரை காதலித்து சில காலம் அவருடன் வாழ்ந்து வந்தார் நடிகை. தற்போது அவரை விட்டு பிரிந்துள்ள வாரிசு பிரபல இயக்குனருடன் நெருக்கம் காட்டுவதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.
இப்படி அப்பா 8 அடி என்றால் வாரிசு 32 அடியாக இருக்கிறார். அதேபோல் திருமணம் என்பது டார்ச்சர். அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது என அவர் தத்துவமும் பேசி வருகிறார். தற்போது சிங்கிளாக இருக்கும் நடிகை நடிப்பில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்.
திருமணத்தை வெறுத்து ஒதுக்கும் நடிகை
- ஊசி போட்டு உதடை வீங்க வைத்த ஹீரோயின்
- பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகை மெருகேற்றிய 5 நடிகைகள்
- காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம்