வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய நடிகை.. அப்ப அது உண்மைதானா

எவர்கிரீன் நடிகை சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். 40 வயதை கடந்த நிலையிலும் கூட அம்மணி இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

இடையில் இவருடைய மார்க்கெட் கொஞ்சம் டல்லடித்தது. ஆனால் இப்போது நடிகையின் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க நடிகையை பற்றி வெளிவரும் கிசுகிசுகளுக்கும் பஞ்சம் கிடையாது. அதிலும் மாஸ் ஹீரோவுடன் இவரை சேர்த்து வைத்து வெளிப்படையாகவே சிலர் பேசி வந்தனர்.

இதனால் நடிகரின் குடும்பத்துக்குள்ளும் பிரச்சனை என்று கூட பேசப்பட்டது. ஆனால் அவை அனைத்திற்கும் நடிகை மௌனத்தை தான் பதிலாக கொடுத்தார்.

இந்த சூழ்நிலையில் தான் அவர் தன்னுடைய பிறந்தநாள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் கட்டிய கோவிலின் புகைப்படமும் இருந்தது.

இதுதான் இப்போது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக்கிவிட்டது. அப்போ அந்த கிசுகிசு எல்லாம் உண்மைதானா என்ற ரீதியில் கேள்விகள் பறக்க தொடங்கி விட்டது.

ஆனால் நடிகை இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார். கோடம்பாக்கம் வட்டாரம் தான் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

Trending News