வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஒரே படத்தில் ஒட்டுமொத்த சினிமாவை புரட்டி போட்ட நடிகை.. அரவிந்த் சாமியே உருகி உருகி காதலித்த காந்த கண்ணழகி

Actor Arvind Samy: பொதுவாக ஒரு சில நடிகைகள் வருடக் கணக்கில் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக ரசிகர்களின் மனதில் நிற்க மாட்டார்கள். ஆனால் ஒரு சில நடிகைகளும் நடித்தது ஒரு படமாக இருந்தாலும் ஆழமாக மனதில் பதிந்து விடுவார்கள். இப்படி தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ் இன்னும் தேடிக் கொண்டிருக்கும் ஹீரோயின்கள் சிலர் இருக்கிறார்கள்.

இந்த லிஸ்டில் ஒருவர் தான் இந்த நடிகை. இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக நடித்தது ஒரே ஒரு படம் தான். ஆனால் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதை தன்னுடைய அழகால் கிரங்கடித்தவர் தான் இந்த அழகிய நடிகை.

Also Read:ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு பெண் வேடத்தில் நடித்த 5 நடிகர்கள்.. ஜெமினியை காதலிக்க தூண்டிய சண்முகி

1997 ஆம் ஆண்டு ஏவிஎம் ப்ரொடக்ஸனின் பொன்விழா கொண்டாட்டமாக எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட படம் தான் மின்சார கனவு. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த கஜோல் தான் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய அழகால் கட்டிப்போட்டு வைத்திருப்பவர். இந்த படத்தில் அவர் பிரியா அமல்ராஜ் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார்.

இந்த படம் தமிழில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. ஸ்ட்ராபெரி பெண்ணே, மானாமதுரை மாமர கிளையிலே போன்ற பாடல்களில் பயங்கர சுட்டித்தனமாக நடனம் ஆடியது மற்றும் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் பிரபு தேவாவுக்கு இணையாக நடனம் ஆடியதோடு அவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரி என படம் முழுக்க கஜோல் ரொம்பவும் அழகாக நடித்திருப்பார்.

Also Read:கோடீஸ்வர வீட்டு பெண்களை வளைத்து போட்ட 6 நடிகர்கள்.. அருண் விஜய்யை ஹீரோவாக்கி அழகு பார்க்கும் மாமனார்

இந்த படத்திற்கு பிறகு கஜோல் அடுத்தடுத்து தமிழ் படங்கள் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதன் பின்னர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. சில வருடங்களுக்கு முன் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லியாக நடித்திருந்தார். மொத்தத்தில் தமிழில் இரண்டே படங்கள் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் அழகில் ஈர்த்தவர்.

மின்சார கனவு படத்தில் தாமஸ் என்னும் கேரக்டரில் நடித்த அரவிந்த்சாமி படம் முழுக்க நடிகை கஜோலை உருகி உருகி ஒருதலையாக காதலித்திருப்பார். இவர்களுடைய கெமிஸ்ட்ரியில், பாடகர் எஸ்பிபி பாடிய தங்க தாமரை மகளே பாடலும் இன்று வரை ரசிக்கப்படுகிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.

Also Read:பிரபல நடிகையை உருகி, உருகி காதலித்த அப்பாஸ்.. சுயநலத்திற்காக கழட்டி விட்ட அந்த ஹீரோயின்

Trending News