Actor Ajithkumar: எப்போதுமே அசலை விட நகலுக்கு கொஞ்சம் மதிப்பு அதிகம் என சொல்வதுண்டு. அப்படித்தான் இந்த நடிகையின் வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. பல ஹிட் படங்களுக்கு காரணமாக இருந்து, இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகைக்கு கிடைக்காத அங்கீகாரம், அவருடைய பயோபிக்கில் நடித்த நடிகைக்கு கிடைத்திருப்பது தான் ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது.
இப்போதெல்லாம் டிவி சேனல்கள் தொடங்கி, யூடியூப் சேனல்கள் வரை தொட்டதுக்கெல்லாம் விருது கொடுத்து வருகிறார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் விருது வாங்குவது என்பது ரொம்பவும் பெரிய விஷயம். இருந்தாலும் கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் நடித்து அதில் முக்கால்வாசி படங்களின் வசூலுக்கு காரணமாக இருந்த நடிகைக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை.
Also Read:விடாமுயற்சிக்கே விடிவு காலம் வரல.. அஜித்துக்காக தவம் கிடக்கும் 5 இயக்குனர்கள்
விஜயலட்சுமி என்னும் பெயரில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக சினிமாவுக்குள் வந்து, சில்க் ஸ்மிதாவாக சினிமாவையே ஆட்சி செய்தவர்தான் அந்த நடிகை. எண்பதுகளின் காலகட்டம் தொடங்கி 1996 வரை சில்க் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி முன்னணி ஹீரோக்களின் படங்களில் சில்க்கின் பாடல் இருந்தால் தான் படம் ஓடும் என்ற அளவுக்கு தான் அன்றைய சினிமா இருந்தது.
சில்க் கால்சீட்டுக்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் தவம் கிடந்தது என்று தான் சொல்ல வேண்டும். இவர் கிட்டத்தட்ட 450 படங்கள் வரை நடித்து இருக்கிறார். ஆனால் ஒரு படத்திற்கு கூட இவருக்கு விருது என்று எதுவுமே கிடைக்கவில்லை. பாரதிராஜா இயக்கத்தில் சில்க் நடித்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் சிறந்த குணசித்திர கதாபாத்திரமாக நடித்திருப்பார். அந்த படத்திற்காக கூட இவருக்கு ஒரு பாராட்டு கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
Also Read:ரொம்ப ஆசைப்பட்டு அஜித் ரீமேக் செய்ய சொன்ன படம்.. இயக்குனரால் கிடைத்த ஏமாற்றம்
நடிகை சில்க் மறைந்து பல வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் சினிமாவில் அவருடைய வாழ்க்கை கதை படமாக எடுக்கப்பட்டது. இதில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, வித்யா பாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. சில்க்கிற்கு கிடைக்காத விருது அவருடைய பயோபிக்கில் நடித்த நடிகைக்கு கிடைத்திருக்கிறது.
ஒட்டு மொத்த சினிமாவுமே நடிகை சில்க் ஸ்மிதாவை தங்களுடைய வியாபாரத்திற்காக கவர்ச்சியாக தான் பயன்படுத்தி இருக்கிறதே தவிர அவருக்கு கொடுக்க வேண்டிய பாராட்டை கூட கொடுக்கவில்லை. யானை இருந்தாலும் 1000 பொன் இறந்தாலும் 1000 பொன் என்பதைப் போல் மறைந்து 27 வருடமாகியும் சமீபத்தில் ரிலீசான மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு கூட சில்க் காரணமாக இருக்கிறார்.
Also Read:மிரட்ட வரும் அஜித்-சஞ்சய் தத் காம்போ.. வைரலாகும் புது போஸ்டர், கிழிய போகும் ஸ்கிரீன்