வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பெத்த தாயே மகளை சினிமாவில் தள்ளிய கொடுமை.. பணத்தாசையால் நடிகைக்கு நேர்ந்த துயரம்

சீக்கிரம் பணமும், புகழும் கிடைக்க வேண்டும் என்றால் ஒன்று அரசியல் மற்றொன்று சினிமா. அதிலும் அரசியலுக்கு வருவதற்கே சினிமா தான் அடித்தளமாக அமைகிறது. இதனால் பலரும் சினிமா வழியாக அரசியலில் களம் காண்கின்றனர்.

இந்நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு நடிகையை வலுக்கட்டாயமாக சினிமாவில் தள்ளிவிட்டு உள்ளார் அவரது தாய். படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உடைய நடிகையை பள்ளி படிக்கும் போது குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் நடிகை அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வந்துள்ளது. ஆனால் கவர்ச்சியாக நடித்தால் அதிகம் சம்பளம் தருவதாக தயாரிப்பாளர்கள் கூறியதால் நடிகையின் தாய் அது போன்ற படங்களில் நடிக்க வைத்துள்ளார்.

இதில் நடிகைக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லையாம். குடும்ப சூழ்நிலை மற்றும் அம்மா கூறியதால் வேறு வழி இல்லாமல் நடித்து வந்து உள்ளார். ஆனால் நடிகை சம்பாதித்த மொத்த காசை வைத்து குடும்பமே குதூகலமாக இருந்து உள்ளது.

எல்லை மீறிய காட்சிகளிலும் நடிக்க வைக்க அவரது அம்மா வற்புறுத்தி இருக்கிறார். ஆகையால் இதற்கு மேலும் இங்கு இருக்க வேண்டாம் என்று நடிகை அம்மாவை உதறி தள்ளிவிட்டு சென்று விட்டாராம். அதன்பிறகும் நடிகைக்கு கவர்ச்சியாக நடிக்க தான் வாய்ப்பு வந்த உள்ளது.

நல்ல திறமை இருந்தும் பெத்த தாயால் நடிகையின் சினிமா கேரியர் மொத்தமாக பாழானது. ஆனாலும் சினிமாவால் நடிகைக்கு நல்ல கணவர் கிடைத்து இருக்கிறார்.

Trending News