திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மணிரத்னத்தால் 30 வருடங்களாக புலம்பி கொண்டிருக்கும் நடிகை.. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் அம்மணி

Directotr Maniratnam: புல்லை கூட பாட வைத்த புல்லாங்குழல் என்று ஒரு பாடல் வரி வரும். அது இயக்குனர் மணிரத்தினத்துக்கு தான் சரியாக பொருந்தும். அவருடைய படங்களை பார்க்க ஆரம்பித்தால் காதலிக்கத் தெரியாதவனோ கவிதை எழுத ஆரம்பித்து விடுவான். தமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் தங்களுடைய வாழ்நாளில் எப்போதாவது ஒருமுறை மணிரத்தினம் இயக்கத்தில் நடித்து விட வேண்டும் என்பதுதான் பேராசையாக இருக்கும்.

மௌன ராகம் படத்தின் திவ்யா, பம்பாய் படத்தின் சைலா பானு, உயிரே படத்தின் மேக்னா, அலைபாயுதே படத்தின் சக்தி, ஓ காதல் கண்மணி படத்தின் தாரா, பொன்னியின் செல்வன் படத்தின் நந்தினி மற்றும் குந்தவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் கதாநாயகிகளாக இருக்கிறார்கள். இதனால்தான் மணிரத்தினத்தின் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என நடிகைகள் ஆசைப்படுவது.

தமிழ் சினிமாவில் பல நடிகைகளுக்கும் தன்னுடைய படத்தின் மூலம் அடையாளத்தை கொடுத்தவர் மணிரத்தினம். ஆனால் ஒரே ஒரு நடிகையை மட்டும் கடந்த 30 வருடங்களாக ஒரே விஷயத்தை நினைத்து புலம்ப வைத்திருக்கிறார். அந்த நடிகையும் இன்றுவரை அவர் போகும் இடத்தில் எல்லாம் மணிரத்தினம் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தை அழாத குறையாக எல்லோரிடமும் சொல்லி வருகிறார்.

Also Read:6 படங்களை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி.. மணிரத்தினத்துக்கே குட் பாய் சொன்ன மலர்

பழம்பெரும் நடிகை லட்சுமி என் மகள் தான் ஐஸ்வர்யா பாஸ்கரன். லட்சுமி பன்முகத் திறமை கொண்ட நடிகை ஆக எல்லா மொழிகளிலும் நடித்து வெற்றி பெற்றிருந்தாலும், ஐஸ்வர்யாவுக்கு ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையாததால் ஹீரோயின் அந்தஸ்தை இழந்து விட்டார். தற்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் முக்கியமான கேரக்டரில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகையாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

புலம்பி கொண்டிருக்கும் நடிகை

1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ரோஜா படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஐஸ்வர்யா தான். மணிரத்தினம் ஐஸ்வர்யாவிடம் கதை சொல்லி படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் ஆனால் ஐஸ்வர்யா ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருந்ததால், ரோஜா படத்திற்கு கால் சீட் கொடுக்க முடியாது என்று சொல்லி வந்த வாய்ப்பை உதறி தள்ளி விட்டாராம்.

ரோஜா படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. ஐஸ்வர்யா நடிக்க வேண்டிய கேரக்டரில் நடித்து மதுபாலா இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அதில் நடித்தவர்கள் எல்லோருமே பெரிய பெரிய நடிகர்கள் ஆகிவிட்டார்கள். அதே நேரத்தில் ஐஸ்வர்யா நடித்துக் கொண்டிருந்த தெலுங்கு படம் டிராப்பாகிவிட்டதாம். இந்த ஆற்றாமையை 30 வருடங்கள் கழித்தும் ஐஸ்வர்யா பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பி வருகிறாராம்.

Also Read:ஆந்திராவின் மணிரத்தினத்துக்காக காத்துக் கிடக்கும் விஜய், சூர்யா.. போட்ட முதல்-ஐ காப்பாற்றி கொடுக்கும் இயக்குனர்

Trending News