திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நடிகையின் எதிர்பாராத கர்ப்பம், அம்மாவுடன் சென்று கருவை கலைத்த கொடுமை.. தப்பையும் செஞ்சிட்டு சப்பை கட்டு கட்டுறீங்க

Actress Controversey: சினிமாவில் ஒரு சில நடிகைகள் தங்களுடைய இளம் வயதிலேயே எடுக்கும் தவறான முடிவுகளால் மொத்தமாக சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சினையை சந்தித்து, வாய்ப்புகளையும் இழந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட நிறைய ஹீரோயின்கள் இப்போது நிறைய யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். அதில் தங்களுடைய சொந்த அனுபவங்களை பற்றி நிறைய பகிர்ந்து வருகிறார்கள்.

அப்படித்தான் இந்த நடிகையும் நான் ரொம்ப யதார்த்தம் என்ற பெயரில், அவர் யார் யாரை காதலித்தார், யாருடன் ஊர் சுற்றினார், யாரெல்லாம் அவர் பின்னால் அலைந்தார்கள் என்று ரொம்பவும் ஜாலியாக பேசி, பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துக் கொண்டிருந்தார். இவருடைய சமீபத்திய பேட்டி ஒன்று தற்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

Also Read:தீராத ஆசையால் பலான நேரத்தில் நடிகருக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல்.. பயந்து போய் நடிகை செய்த காரியம்

90 களின் காலகட்டத்தில் பலான படங்கள் நடித்து அதன் மூலம் பேமஸ் ஆனவர் தான் நடிகை ஷகிலா. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவர் மீது இருந்த நெகடிவ் விமர்சனங்கள் மொத்தமும் மறந்து போய் மக்கள் இவரை ரசிக்க ஆரம்பித்தார்கள். கிடைத்த வாழ்க்கையை உபயோகப்படுத்திக் கொள்ளாமல் பழசை பேசுகிறேன் என்ற பெயரில் இப்போது ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

ஷகிலா தன்னுடைய பேட்டிகளில் தனக்கு நிறைய காதலர்கள் இருந்ததாகவும், அவர்கள் தன்னை பிரிந்து வேறு பெண்களை திருமணம் செய்து கொண்ட பின்பு கூட, தன்னோடு தொடர்பில் இருந்ததாகவும் சொல்லி இருக்கிறார். தற்போது தன் காதலித்த ஒருவரின் மூலம் கர்ப்பமானதாகவும், தான் கர்ப்பமானது தனக்கே தெரியாது எனவும் சொல்லி இருக்கிறார்.

Also Read:இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்புகளை வாரிய நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த லீலைகள்

ஒரு கட்டத்தில் ஷகிலாவின் அம்மா இதை கண்டுபிடித்து, மருத்துவரிடம் கூட்டி சென்று போய் கருவை கலைத்து விட்டதாக சொல்லிய இவர், அப்போது எடுத்த முடிவு சரியான முடிவுதான் எனவும் சப்பை கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு சில யூடியூப் சேனல்களில் நிறைய பேட்டிகள் எடுக்கும் இவர், பஞ்சாயத்து தலைவி போல் அவர்களை கேள்வி கேட்பதும், மிரட்டுவதுமாக பேசுவார்.

ஊருக்கு உபதேசம் சொல்லிவிட்டு, இவருடைய வாழ்க்கையில் இவர் செய்தது அத்தனையுமே நியாயம் என்பது போல் இதுபோன்ற பேட்டிகளில் பேசி வருகிறார். தாய்மையை மறந்து ஒரு கருவை கலைத்ததை கூட ரொம்பவும் ஈசியாக சொல்லிவிட்டு, அதுதான் சரியான முடிவு என்று பேசும் இவருடைய இந்த பேச்சுக்கு நிறைய பேர் சர்ச்சையான கமெண்ட்களை செய்து வருகிறார்கள்.

Also Read:நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு.. ஓவர் ஆட்டம் போட்ட நடிகையை கதறவிட்ட புருஷன்

Trending News