திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

58 வயது முரட்டு நடிகரின் மீது கண்ணு வச்ச வாய் கொழுப்பு நடிகை.. அடுத்த திருமணத்திற்கு தயார்

பிரபல நடிகரின் வாரிசாக இருக்கக்கூடிய இந்த வம்புக்கார நடிகை, சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அடுத்தடுத்து திருமணங்களை செய்து கொண்டதால் சர்ச்சைக்குரிய நடிகையாகவே பார்க்கப்படுகிறார்.

இவருக்கு மூன்று திருமணம் நடந்து, அவை விவாகரத்தில் முடிந்தது. இப்போது நான்காவதாக பிளேபாய் ஒருவரை திருமணம் செய்து கொள்ள பிளான் போடுகிறார். இந்த வாய் கொழுப்பு நடிகை எப்போதுமே சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு பிரச்சனையை பேசிப் பேசியே ஊதி கெடுப்பார்.

ஆனால் 58 வயதான முரட்டு நடிகர் மற்றும் 20 வயது இளம் பெண் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஏழு மாதமாக இருந்து இப்போது பிரிந்து விட்டனர். இந்த விஷயத்தைப் பற்றி வாய்க்கொழுப்பு நடிகை எதுவுமே பேசவில்லை.

Also read: ஆசை 60 நாள் மோகம் 30 நாள்.. நடிகரை காதலி கழட்டி விட காரணம் இதுதானாம்

திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் ஏதாவது சின்ன தவறு செய்து விட்டால், அதை பேசிப் பேசியே நாரடிக்கும் இந்த நடிகை, முரட்டு நடிகரை மட்டும் விட்டு வைத்ததை ஏன் என நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர். அந்த பிளேபாய் நடிகரின் பர்சனலில் அடுத்தவர்கள் தலையிடுவது அவசியமற்றது என ஒரே போடா போட்டு விட்டார்.

இந்த வம்புக்காரன் நடிகைக்கு பிளேபாயின் மீது ஒரு கண்ணு. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அவர் இன்னொரு திருமணத்திற்கு தயாரானதை தான் இப்படி எல்லாம் மறைமுகமாக சொல்லியிருக்கிறார். விரைவில் இந்த நடிகையின் நான்காவது திருமண செய்தியும் வெளியாக கூடும்.

Also read: ப்ரொடியூசர் என்று சொல்லி அட்ஜஸ்மென்ட் செய்ய வைத்த அம்மா.. சுயரூபத்தை அறிந்த நடிகை

Trending News