சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

காத்திருந்தவ புருஷன மயக்கிய நடிகை.. காதலனை மீட்க போராடும் காதலி

ஆரம்பத்தில் ஒருவரை காதலித்து வொர்க் அவுட் ஆகாத நிலையில் தன்னுடன் நடித்த பெரிய குடும்பத்து வரிசை திருமணம் செய்து செட்டிலானார் அந்த நடிகை. ஆனால் சுதந்திரத்திற்கு தடையாக இருக்கிறது என அந்த திருமண வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

அதைத்தொடர்ந்து ஜாலியாக சிறகடித்து பறந்து வந்த நடிகை இப்போது இளம் ஹீரோவுடன் ஐக்கியமாகிவிட்டாராம். இருவரும் சேர்ந்து நடித்த படத்தில் கெமிஸ்ட்ரி எக்கச்சக்கமாக ஒர்க் அவுட் ஆன நிலையில் இருவரும் தனியாக ரகசிய குடித்தனமே நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்து உள்ளது.

இத்தனைக்கும் அந்த ஹீரோ பப்ளி நடிகையுடன் காதலில் இருப்பது ஊர் அறிந்த விஷயம் தான். ஆனால் காதலி சம்பாதிப்பதிலேயே கவனம் செலுத்திய நிலையில் நடிகரின் பார்வை விவாகரத்து நடிகையின் பக்கம் சென்றிருக்கிறது.

Also read: அம்மா நடிகையை அட்ஜஸ்மென்ட் செய்த ஹீரோ.. மகன் வயதில் இருந்து கொண்டு செய்த காரியம்

தன்னை குழந்தையைப் போல் பார்த்துக் கொள்ளும் நடிகரை நடிகைக்கும் ரொம்பவே பிடித்து விட்டதாம். அதனால் இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழலாம் என்று நடிகை ஐடியா கொடுத்திருக்கிறார். இதைத்தான் எதிர்பார்த்தேன் என அந்த நடிகரும் தற்போது புது காதலியுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.

தனித்தீவில் இருவரும் தற்போது ஜாலியாக பொழுதை கழித்து வருவது நடிகரின் காதலிக்கு தெரிய வந்துள்ளது. காத்திருந்தாவ புருஷனை நேத்து வந்தவா தள்ளிட்டு போயிட்டாளே என நொந்து போன நடிகை இப்போது இருவரையும் பிரிக்கும் வேலையில் இறங்கியுள்ளாராம்.

ஆனால் இதெல்லாம் சில மாதங்கள் கூட நீடிக்காது. ஏனென்றால் நடிகர் கல்யாணம் வரை எல்லாம் செல்ல மாட்டார். புதுப்புது காதலியை மாற்றுவது தான் அவருடைய ஜாலியான பொழுதுபோக்கு என்கிறது திரையுலக வட்டாரம்.

Also read: கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. பட வாய்ப்பை பிடிக்க நடிகை செய்யும் வேலை

Trending News