திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நீங்க ரொம்ப கருப்பு, ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகை.. பின் கண்டிஷன் போட்டு நடித்த ஒரே படம்

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடி போட்டு நடிக்க கதாநாயகிகள் பலரும் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரையே ஒரு நடிகை பல வருடமாக டீலில் விட்டிருக்கிறார். 90களின் காலகட்டத்தில் ரஜினிகாந்த், விஜயகாந்த் மற்றும் முரளியுடன் நடிப்பதற்கு நடிகைகள் ரொம்பவே தயங்குவார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் அந்த காலகட்டத்தில் இருந்த ஹீரோக்களின் ஸ்டீரியோடைப் தான்.

நடிகர்கள் என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்த மாதிரியே நடிகைகளும் நினைத்திருந்த காலம் அது. அது போன்ற ஸ்டீரியோடைப்பை முதலில் உடைத்தெறிந்தவர் ரஜினிகாந்த் தான். அவருக்குப் பின்னால் தான் நடிகர்கள் பலர் திறமை மட்டும் இருந்தால் போதும், சினிமாவில் வெற்றி பெற்று விடலாம் என படத்தில் நடிக்க வந்தார்கள்.

Also Read:எங்கே நிம்மதி என அலையும் சூப்பர் ஸ்டார்.. மாலத்தீவுக்கு பின் உடனே கிளம்பும் ரஜினி

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆன பிறகு அவருடன் நடிக்க மாட்டேன் என சொன்ன பல நடிகைகளும் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு அவருடன் நடிக்க, அந்த சமயத்திலும் கருப்பாக இருக்கும் ரஜினியுடன் நடிக்கவே மாட்டேன் என ஒரு நடிகை ஒற்றை காலில் நின்று அடம்பிடித்து இருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் இருந்து நடிப்பதற்கு என்று தனக்கென ஒரு கோட்பாட்டை வைத்திருந்த நதியா தான் அந்த நடிகை.

ரஜினியுடன் நடிப்பதற்கு நதியாவுக்கு பலமுறை வாய்ப்புகள் வந்தும் அவர் கருப்பாக இருப்பதால் நான் அவருடன் நடிக்க மாட்டேன் என மறுத்து இருக்கிறார். அதன் பின்னர் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவர் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ஆகி விட்டார், அவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருக்கிறது. அவருடன் நடித்தால் உங்களுடைய சினிமா கேரியர் தான் வளர்ச்சி அடையும் என்று மனதை மாற்றி இருக்கிறார்கள்.

Also Read:அந்த ஒரு வரி வச்சே தீருவேன் என ரஜினியிடம் சண்டையிட்ட வைரமுத்து.. இப்ப வரை கொண்டாடப்படும் பாடல்

நீங்கள் சொல்வதால் ஒப்புக்கொள்கிறேன் என்று சொல்லி நடிக்க சம்மதித்த நதியா, ரஜினி தன்னைத் தொட்டு நடிக்க கூடாது, ரொமான்ஸ் சீன் எங்கள் இருவருக்குள்ளும் இருக்கவே கூடாது என நிபந்தனை போட்டு தான் ராஜாதி ராஜா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவருடைய நிபந்தனை படியே அந்தப் படத்தின் இவர்கள் இருவருக்கும் நெருக்கமான காட்சிகளே கிடையாது.

ரஜினியுடன் இப்படியாவது நிபந்தனை போட்டு நடித்த நதியா, கடைசி வரை கமலுடன் நடிக்கவே இல்லை. அன்றிலிருந்து, இன்றுவரை நடிகைகளில் சிலர் பணம் சம்பாதித்தால் மட்டும் போதுமென எந்த ஒரு கொள்கையும் இன்றி நடித்துக் கொண்டிருக்கும் பொழுது, நதியா தனக்கென ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு அதிலிருந்து மீறாமல் இன்று வரை நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read:சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸாகும் அடுத்த படம்.. ரஜினியின் நண்பர் நினைவாக எடுத்த முடிவு

Trending News