புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நடிகை.. சினிமாவும் காலை வாரிவிட்டதால் சாமியாரான கொடுமை

சினிமாவில் உள்ள நடிகைகள் 30 வயதை கடந்து தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். காரணம் தங்களது மார்க்கெட் உள்ள போது பணத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பின்பு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு வருவது மிகவும் கடினம். அப்படியே வந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

ஆனால் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை ஒருவர் உச்சத்தில் இருந்த போதே பிரபலம் ஒருவரை காதலித்து மனம் முடித்துக் கொண்டார். சந்தோஷமாக போன இவர்களது திருமண வாழ்வில் குட்டையை குழப்புவதற்காக நடிகையின் எக்ஸ் காதலன் வந்துவிட்டார். அதாவது திருமணத்திற்கு முன்பு நடிகை ஒரு ஹீரோ உடன் நெருக்கமான காட்சியில் நடித்திருந்தார்.

Also Read : அப்பா வயது தொழிலதிபருடன் ஹோட்டலில் உல்லாசமாக இருந்த நடிகை.. போலீஸ் ரெய்டில் சிக்கிய சம்பவம்

அப்போது படத்தில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் இவர்களுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாக ஒன்றாக பழகி வந்திருக்கின்றனர். ஆனால் ஹீரோ ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் நடிகை வேறு ஒருவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ஆனாலும் விடாமல் துரத்தி இருக்கிறார் எக்ஸ் காதலன்.

இதனாலேயே நடிகையின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை வந்திருக்கிறது. கணவர் எவ்வளவோ கண்டித்தும் நடிகை கேட்ட பாடு இல்லை. கடைசியில் இவர் வேண்டவே வேண்டாம் என நடிகையின் கணவர் விவாகரத்து செய்து விட்டார். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக நடிகையின் வாழ்க்கை அமைந்து விட்டது.

ஆனாலும் சினிமாவில் ஆர்வம் செலுத்தி வந்த நடிகை செகண்ட் இன்னிங்ஸில் பட்டையை கிளப்பி வந்தார். மேலும் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவும் காலை வாரி விட்டதால் யோகா, ஆன்மீகம் என தன்னை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டார். இப்போது முழு சாமியாராகவே மாறிவிட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Also Read : இளம் நடிகையை வேட்டையாடிய பிரபல அரசியல்வாதி.. பணத்துக்காக சரண்டர் ஆன பிரியமான நடிகை

Trending News