சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

காமெடி நடிகரை நம்பி மோசம் போன நடிகை.. வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் பரிதாபம்

நடிகை சின்னத்திரை தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் வெள்ளித்திரையில் நடிக்கலாம் என்று ஆசைப்பட்டு காமெடி நடிகர் ஒருவருக்கு ஹீரோயினாக நடித்தார். இந்த படத்தின் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருந்த போது நடிகையின் குடும்பத்தினர் இதை தடுத்துள்ளனர்.

ஆனால் சீரியல் நடிகையோ இந்த வாய்ப்பை வைத்து கண்டிப்பாக வெள்ளித்திரையில் ஜொலித்து விடலாம் என்று குடும்பத்தின் பேச்சை மீறி இறங்கினார். மேலும் படம் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது. அதோடு மட்டுமல்லாமல் நடிகைக்கு அதுவரை இருந்த பெயரும் மொத்தமாக டேமேஜ் ஆனது.

அதாவது ஏற்கனவே காமெடி நடிகருக்கு நிறைய கெட்ட பெயர் இருக்கிறது. பெரும்பாலும் பெரிய நடிகை தன் படத்தில் போட வேண்டும் என்று அடம் பிடிப்பார். அதுமட்டுமல்லாமல் பல லட்சங்களை வாரி இறைத்து நடிகைகளை அட்ஜஸ்மென்ட் செய்ய வைத்திருக்கிறார்.

Also Read : நடிகை மீதான மோகத்தால் பொண்டாட்டியை கழட்டி விட்ட வில்லன்.. ஒன்றாய் இரண்டாய் அத்துமீறும் லீலைகள்

அதோடு மட்டுமல்லாமல் அவருடன் பணியாற்றிய சக நடிகர்களும் அவரை கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர். இதைப் பற்றி எல்லாம் நடிகை யோசிக்காமல் அவர் படத்தில் நடித்ததால் இவரும் காமெடி நடிகர் உடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்திருப்பார் என்று ஒரு பேச்சு கிளம்பியது.

காமெடி நடிகருக்கு ஜோடியாக நடித்ததால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகைக்கு வாய்ப்பு தர மறுக்கிறார்கள். மேலும் நடிகை சீரியலில் இருந்து விலகியதால் மீண்டும் சின்னத்திரையிலும் நடிகைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் என்ன செய்து என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.

Also Read : காலில் விழுந்து கெஞ்சியும், கணவரை ஏற்றுக் கொள்ள மறுக்கும் நடிகை.. இயக்குனருடன் நடக்கப் போகும் 2வது திருமணம்

Trending News