வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜய் கூட ஒரு படம் கிடைச்சா நல்லாருக்கும்.. தூதுவிடும் ஸ்வீட் நடிகை

தளபதி விஜய் தற்போது இளம் இயக்குனர்களுடன் பணியாற்றுவது போலவே இளம் நடிகைகளுடன் பணியாற்றத் தொடங்கி விட்டார். அதனால் ஏற்கனவே ஜோடி போட்ட நடிகைகளுக்கு விஜய் பட வாய்ப்பு கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளது.

ஆனால் ஆரம்பத்தில் விஜய் அப்படி கிடையாது. ஒரு சில நடிகைகளுடன் நான்கு படங்கள் கூட ஜோடி போட்டு நடித்துள்ளார். அதில் திரிஷா, அசின் போன்றவர்கள் விஜய்யின் ஃபேவரட் லிஸ்டில் இருந்தனர்.

அந்த வகையில் விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். சமீபத்தில் கூட தன்னுடைய நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு மூத்த நடிகர்களின் பட வாய்ப்புகள் தான் தொடர்ந்து கிடைத்து வருகிறது. அதிலும் தெலுங்கில் 60 வயதைத் தாண்டிய சிரஞ்சீவி, நாகர்ஜுனா போன்றவர்களின் பட வாய்ப்புகள்தான் கிடைக்கிறதாம்.

இதனால் அப்செட்டான காஜல் அகர்வால் தற்போது தமிழ் சினிமாவில் விஜய்யின் பட வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என விஜய்யின் நெருக்கமானவர்களுக்கு தொடர்ந்து தூது விட்டுக் கொண்டிருக்கிறாராம்.

விஜய்யுடன் மூன்று படங்களில் நடித்ததால் அவருக்கும் விஜய்க்கு ஒரு நல்ல நட்பு இருக்கிறது. இதனால் நலம் விசாரிப்பது போல பட வாய்ப்புகளுக்கு நூல் விட்டு கொண்டிருக்கிறாராம் காஜல் அகர்வால். ஆனால் விஜய் தற்போது இளம் நடிகைகளுடன் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டாரே.

kajal-agerwal-cinemapettai
kajal-agerwal-cinemapettai

Trending News