வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மணிரத்னம் மனதில் இடம் பிடித்தாலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நடிகை.. வட போச்சே சோன முத்தா

இயக்குனர் மணிரத்தினத்தின் ஒரு படத்திலாவது எப்படியும் நடித்துவிட வேண்டும் என்பது சினிமாவில் உள்ள நடிகர், நடிகர்களின் ஆசை. அதுமட்டுமின்றி தற்போது அவரின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் பல பிரபலங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கனகச்சிதமாக தேர்வு செய்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் எல்லோருக்குமே சரியான முக்கியத்துவத்தை மணிரத்தினம் அளித்திருந்தார்.

Also Read :வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

இப்படி மணிரத்தினம் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்து வரும் நிலையில் இன்று வரை ஒரு நடிகைக்கு மட்டும் தனது மனதில் இடம் கொடுத்தாலும் அவரை தனது படத்தில் நடிக்க வைக்க முயற்சிப்பதில்லை. அதாவது எந்த சூழ்நிலையிலும் மணிரத்தினம் கூடவே பயணிப்பவர் நடிகை சுஹாசினி.

கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான சிந்து பைரவி படம் சுஹாசினியின் நடிப்புக்கு தீனி போட்ட படம். மேலும் சுஹாசினி மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க கூடியவர். அதுமட்டுமின்றி எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதில் பின்னி பெடல் எடுப்பார்.

Also Read :ஜெயராமின் தொப்பைக்காக மணிரத்னம் செய்த வேலை.. பெரிய மனுஷன் செய்ற வேலையா இது

ஆனால் தனது மனைவியாக இருந்தாலும் தற்போது வரை மணிரத்தினம் ஒரு சின்ன கதாபாத்திரம் கூட சுஹாசினிக்கு கொடுத்ததில்லை. இப்போதும் சுஹாசினி சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார். பொன்னியின் செல்வன் என்ற படம் மிகப்பெரிய அளவில் பேசப்படுகின்ற படம்.

இந்த படத்திலாவது சுஹாசினிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆனால் மணிரத்னம் இவருக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்ற காரணம் தெரியவில்லை. இனி வரும் காலங்களிலாவது மணிரத்தினம் தனது படங்களில் சுஹாசினிக்கு வாய்ப்பு கொடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read :எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா மணிரத்னம்.? பொன்னியின் செல்வன் முழு விமர்சனம்

Trending News