புதன்கிழமை, ஜனவரி 22, 2025

என் இடத்தில எந்த பொண்ணு இருந்திருந்தாலும் செத்துருப்பா.. கொடூர சம்பவத்திலிருந்து மீண்டு வந்த அஜித் பட நடிகை

Ajith Movie Heroine: நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்களை பெற்றவர் தான் இந்த நடிகை. முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்திருக்கும் இவர் அஜித்துடன் இணைந்தும் நடித்திருக்கிறார். இப்படி பிசியாக இருந்த இவர் வாழ்வில் நடந்த ஒரு கொடூர சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரை உலகத்தையே பதறிப் போக செய்தது.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார். தெத்துப் பல்லழகியான இவர் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்து விட்டார். அதை தொடர்ந்து பிஸியாக நடித்துக் கொண்டிருந்த வேளையில் இவருக்கு நடந்த ஒரு சம்பவம் பலரையும் பதற வைத்தது.

Also read: மார்க்கெட்டை இழந்து தவிடு பொடியான மீரா ஜாஸ்மின்.. பாவனா கேசால் பரிதாபமாய் போன கேரியர்

பலவந்ததிற்கு ஆளான இவருக்கு ஆதரவாக மலையாள திரையுலகம் மட்டுமல்லாமல் பலரும் குரல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைத்தது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட ஹீரோவின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த கொடூர சம்பவத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் பாவனா ஒரு பேட்டியில் கூறிய விஷயம் தான் சபாஷ் போட வைத்திருக்கிறது.

அதாவது அவருக்கு நடந்த சம்பவம் பற்றி மனம் திறந்து பேசிய அவர், என்னுடைய இடத்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால் நிச்சயம் உயிரோடு இருந்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு நான் துயரத்தை அனுபவித்தேன். ஆனால் எந்த தப்பும் செய்யாத நான் எதற்கு முடங்கி போய் இருக்க வேண்டும்.

Also read: பாவனாவுடன் முதல் படத்திலேயே அந்தரங்க உறவு.. திமிருடன் மேடையில் உளறிய இயக்குனர்

தப்பு செய்தவர்கள் தான் அதை நினைத்து வெட்கப்பட வேண்டும் என்று தைரியமாக கூறினார். அவருடைய இந்த பேச்சு பலருக்கும் முன்னுதாரணமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் இந்த சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே தான் காதலித்த நபரையும் அவர் தைரியமாக கரம் பிடித்தார்.

இதற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்து வாழ்த்து கூறியது. அதைத்தொடர்ந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த பாவனா தற்போது கை நிறைய படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழிலும் அவர் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

Also read: ஒரு வழியா முடிவுக்கு வந்த அஜித்தின் விடாமுயற்சி .. அட போங்கடா என டேக்கா கொடுத்த த்ரிஷா

Trending News