வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஸ்ருதிஹாசன் உடன் லோகேஷ் செய்யப் போகும் தரமான சம்பவம்.. ஆண்டவர் கிட்டயே ஆசீர்வாதம் வாங்கியாச்சு

An album featuring Shruti Haasan and Lokesh: வன்முறை வேண்டாம் என்பதை தனது வன்முறையான படங்களின் மூலம் பிரதிபலித்து வருபவர் இளம் இயக்குனர் லோகேஷ்.  லோகேஷ் இயக்கத்தில் உலக நாயகன் நடித்த விக்ரம் கமலஹாசனை மேலும் மெருகேற்றியது எனலாம். கமலஹாசனுக்கு கம்பேக் கொடுத்தது போல் அமைந்த  விக்ரமால் பல ப்ராஜெக்ட்களில் துணிந்து இறங்கி உள்ளார் கமலஹாசன்.

கமலஹாசன் மற்றும் லோகேஷன் கூட்டணி தமிழ் சினிமாவில் அதிரடி திருப்பத்தை உண்டாக்கியது. மேலும் இவர்களுக்கு இடையே  இருந்த கெமிஸ்ட்ரியை உறுதி செய்வது போல மீண்டும் லோகேஷ் உடன் விக்ரம் 2வுக்கு ஜோடி சேர்வதாக அறிவித்துள்ளார் கமலஹாசன்.

இதற்கிடையே லோகேஷ் மற்றும் சூப்பர் ஸ்டாரின் கூட்டணி “தலைவர் 171” இல் இணைந்தது. இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ள லோகேஷ் அவர்களுக்கு இடைவேளை தீனியாக உலக நாயகனின் மகள் ஸ்ருதிஹாசன் உடன் ஒரு ப்ராஜெக்ட் இல் இணைய உள்ளார் என்பதை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.

Also read: 32 வருஷம் பின்னாடி போகும் ரஜினி.. தலைவரை மொத்தமாக மாற்றி செதுக்கும் லோகேஷ்

காதலர் தினம் என்பது முந்நாள், இந்நாள் மற்றும் காதலிக்க போகும் காதலர்கள் என அனைவருக்கும் ஸ்பெஷலான ஒன்று. எனவே இந்த ஆண்டு காதலர் தினத்தை மையமாக வைத்து லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஆல்பம் ஒன்றை வெளியிட போவதாக தெரிவித்துள்ளனர்.

உலக நாயகனின் ஒப்புதலோடு ஸ்ருதிஹாசன் காதலை மையமாக வைத்து பாடலை உருவாக்கி இசையமைத்திருக்கிறாராம். பின்பு  நடிப்பதற்கு லோகேஷை அணுகியுள்ளாராம் ஸ்ருதிஹாசன். லோகேஷும் இந்த பாடலை கேட்டுவிட்டு பின்பு நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

சமீபத்தில் இந்த ஆல்பம் தொடர்பான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தை ஒட்டி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் போஸ்டர் மூலம் வெளியிட்டு உள்ளது.

இதில் “இனிமேல் டெலுலு இஸ் தி நியூ சொல்லு! இதுவே ரிலேஷன்ஷிப்” என்று புதுமையாக பதிவிட்டு உள்ளனர். இதை கேட்கும்போது என்ன ரிலேஷன்ஷிப்? ஏதோ வில்லங்கம் இருப்பது போல் தோன்றுகிறதே. காலம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று தெரியவில்லையே என்று முதியவர்கள் ஏங்க! இளம் தலைமுறையோ என்னவானாலும், எதையும் ஒரு கை பார்த்து விடலாம் என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Also read: “நோ மீன்ஸ் நோ..” கொள்கையை தீவிரமாக கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன் லிவிங் டுகெதரில் கழட்டிவிட்ட 6 பிரபலங்கள்..

Trending News