விஜய், அஜித் ரசிகர்களுக்கு இணையாக சூர்யாவும் ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான சிங்கம் படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து சூர்யாவின் சூரரைப்போற்று படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
மேலும் சூர்யா தயாரித்து, நடித்த ஜெய் பீம் படம் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலம், ரசிகர்கள் என அனைவரும் பாராட்டும் படியாக அமைந்திருந்தது. இந்நிலையில் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தனது 41 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தில் சூர்யா போதைப்பொருள் அதிபராக ரோலக்ஸ் என்ற கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். ஒரு ஐந்து நிமிட காட்சி என்றாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக கொடுக்கப்பட்டிருந்தது.
பல வருடங்களாக கமலஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நிஜமாகியுள்ளது, அதற்கு லோகேஷிக்கு நன்றி என சூர்யா தெரிவித்திருந்தார். மேலும், இந்தக் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா ஒரு ரூபாய் கூட சம்பளமாக பெறவில்லையாம்.
மேலும் கமல் ரசிகர்களை தாண்டியும் சூர்யா ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சூர்யாவின் தீவிர ரசிகரான ஒருவர் தனது நோட்டில் விக்ரம் படத்தில் சூர்யா தோன்றிய ஐந்து நிமிடத்தில் பேசிய வசனங்களை எழுதியுள்ளார். அந்தளவுக்கு ரோலக்ஸ் கதாபாத்திரம் அவருக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விக்ரம் மூன்றாம் பாகத்தில் சூர்யாவுக்கு அதிகமான காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் சூர்யாவின் மாஸ் காட்சிகள் விக்ரம் 3 இல் வர உள்ளது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யாவின் இரும்புக்கை மாயாவி படம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.