தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகவும், சிறந்த கலைஞராகவும் விளங்கியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல மக்களுக்கு பிடித்த சிறந்த அரசியல் தலைவரும் ஆவார். தமிழக அரசியல் வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் இவருக்கு மிகப்பெரிய இடம் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது.
இவருக்குப் பிறகு எத்தனையோ அரசியல் தலைவர்கள் வந்தாலும் மக்கள் மனதில் எம்ஜிஆர் என்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இப்படி பல்வேறு சாதனைகளைப் படைத்த இவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவர்.
Also read:எம்ஜிஆர், சிவாஜியை ஃபாலோ செய்த விஜய், அஜித்.. இரு தலைமுறைக்கும் இருக்கும் ஒற்றுமை
முதலமைச்சராக பொறுப்பேற்ற நிமிடத்தில் இருந்து இவர் மக்களுக்கு எண்ணற்ற சேவைகள் புரிந்திருக்கிறார். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் இவர் பல்வேறு நலத்திட்டங்களையும் செய்திருக்கிறார்.
அதனால் தான் இவருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருது கலை, இலக்கியம், அறிவியல், சேவை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கொடுக்கப்படும். அந்த வகையில் எம்ஜிஆர் சிறப்பாக மக்கள் சேவை புரிந்த காரணத்திற்காக இந்த விருதை பெற்றார்.
Also read:லதா ரஜினிகாந்த் வீட்டில் எம்ஜிஆர் போட்ட சண்டை.. புரட்சித்தலைவர் தந்த சர்டிவிகேட்
ஆனால் இந்த விருது அவருடைய மறைவுக்கு பிறகு தான் அறிவிக்கப்பட்டது. எம்ஜிஆர் உடல்நல குறைவின் காரணமாக 1987 ஆம் ஆண்டு உயிர் நீத்தார். அதற்கு மறுவருடம் தான் இவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிலேயே இந்த விருதைப் பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
திரைத்துறையில் பல சாதனைகளை புரிந்த நடிகர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. ஆனால் ஒருவர் கூட இந்த பாரத ரத்னா விருதை இதுவரை பெறவில்லை. இந்த பெருமையை எம்.ஜி.ஆர் இப்போது வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை ஆகும்.
Also read:தமிழ் சினிமாவை கெடுத்த எம்ஜிஆர்.. ஆரோக்கியம் இல்லாமல் இன்று வரை கஷ்டப்படும் சந்ததி