வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தங்கச்சிக்காக காதல் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. வரலட்சுமி உடம்பை குறைத்ததில் இப்படி ஒரு சங்கதி இருக்கா!

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் வாரிசு நடிகை என்னும் அடையாளத்தோடு தமிழ் திரைக்குள் நுழைந்தார். ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த இவருக்கு போகப் போக வில்லி போன்ற வாய்ப்புகள் தான் அதிகமாக வர ஆரம்பித்தது. அந்த கேரக்டர்களிலும் துணிந்து நடித்த வரலட்சுமி தற்போது ஹைதராபாத்தில் குடியேறி இருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே இவர் ஹைதராபாத்தில் தங்கி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். ஆனால் தற்போது அவர் மீண்டும் சென்னைக்கு திரும்பி வர இருக்கிறாராம். ஏனென்றால் அவருடைய அப்பா சரத்குமார் மகளுக்கு விரைவில் திருமணம் செய்து விட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.

Also read : என்ன பொண்ணுடா! 15 கிலோ உடல் எடையை குறைத்து வேற லெவலுக்கு மாறிய வரலட்சுமியின் புகைப்படங்கள்

37 வயதாகும் வரலட்சுமி இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதற்கான முயற்சிகள் எடுத்தும் கூட இவர் திருமணம் வேண்டாம் என்று விடாப்பிடியாக மறுத்து வந்தார். இதற்கு விஷாலுடன் இருந்த காதல் தோல்விதான் காரணம் என்று அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இப்போது வரலட்சுமி தன் காதல் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு திருமணத்திற்கு சம்மதித்து விட்டாராம். ஏனென்றால் இவருக்கு அடுத்தபடியாக அவருடைய தங்கைக்கும் வயது ஏறிக்கொண்டே போகிறது. அதை பற்றி கூறிய சரத்குமார் மகளை திருமணம் செய்து கொள்ள சொல்லி பேசி இருக்கிறார்.

Also read : வரலட்சுமியை நம்பி பிரயோஜனம் இல்லை.. ராதிகா-சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு!

தன்னால் தன் தங்கையின் திருமணம் தாமதமாகி விடக்கூடாது என்பதற்காகவே வரலட்சுமி தற்போது இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். எப்படியோ அவர் ஓகே சொல்லிவிட்டார் என்று சரத்குமாரும் அவரின் முதல் மனைவி சாயாவும் மாப்பிள்ளை தேடும் பணியில் தீவிரமாக இருக்கிறார்களாம்.

varalakshimi-cinemapettai
varalakshimi-cinemapettai

அதனால் இந்த வருட இறுதிக்குள் வரலட்சுமிக்கு ஏத்த சரியான ஒரு மாப்பிள்ளையை அவர்கள் தேடி கண்டுபிடித்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு விஷயம் இருப்பதால்தான் வரலட்சுமி தன்னுடைய உடல் எடையை இவ்வளவு சீக்கிரம் குறைத்து விட்டாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆரம்பத்தில் பூசிய உடலுடன் இருந்த இவர் தற்போது நயன்தாரா ரேஞ்சுக்கு உடல் எடையை குறைத்து அதிரடி காண்பித்துள்ளார்.

Also read : பழுவேட்டரையரை நெற்றி பொட்டில் அடித்தாற்போல் கேட்ட கேள்வி.. ஆவேசத்துடன் பதிலளித்த சரத்குமார்

Trending News