வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வாடகத்தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. நயன்தாரா, விக்னேஷ் சிவன் கொடுத்த ஷாக் தகவல்

கடந்த ஒரு வாரமாக இணையத்தையே ஆட்டிப்படைத்த விஷயம் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு தான். அதாவது திருமணமான நான்கு மாதத்திலேயே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகி உள்ளோம் என்று பதிவு போட்டிருந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

மேலும் நயன்தாரா வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றிருப்பார் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சில விதிமுறைகள் உள்ளது. அதாவது தம்பதியினரில் யாராவது ஒருவருக்கு மருத்துவர் ரீதியாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்க வேண்டும்.

Also Read :லேடி சூப்பர் ஸ்டார் புருஷனா சும்மாவா.. நயன்தாராவால் படாத பாடுபடும் விக்னேஷ் சிவன்

அதுமட்டுமின்றி திருமணமாகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்றால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அதுவும் குழந்தையை பெற்று தரும் அந்த வாடகை தாய் இவர்களுக்கு உறவினராக இருக்க வேண்டும். இவ்வாறு பல விதிமுறைகளை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பின்பற்றினார்களா என்பது தெரியவில்லை.

இதனால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் சட்டபடி தான் இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார்கள் என்று ஆதாரங்களை கொடுத்துள்ளனர்.

Also Read :நயன்தாராவின் குழந்தையை சுமந்த தாய் யார் தெரியுமா.? உச்சகட்ட அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்

அதாவது 6 வருடங்களுக்கு முன்பே நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர். மேலும் கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்களையும் சமர்பித்து உள்ளனர்.

மேலும் எல்லா விஷயங்களும் முறைப்படி தான் நடந்துள்ளதாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் சார்பில் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 6 வருடங்களுக்கு முன்பே நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரசிகர்களுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Also Read :நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை காலி செய்த விக்னேஷ் சிவன்.. இது என்னடா புது உருட்டா இருக்கு!

Trending News