புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கோமதி.! கொலகாண்டில் இருக்கும் பாண்டியன் குடும்பம்

Pandian Stores serial 2 today episode: ‘சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி’ என்பது போல பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அம்மா கோமதி சொல்ற வார்த்தைக்காகவே ராஜியை கதிர் திருமணம் செய்து கொண்டார். ஆனா, திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மருமகள் ராஜியை படிக்க வைக்கிறேன் பாருங்கள்! என்று அண்ணன்கள் வீட்டின் முன்பே ஓவரா கோமதி பந்தா காட்டியது இப்போது கதிருக்கு தான் வினை ஆயிருச்சு.

தங்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே ராஜியை காதலிப்பது போல் நாடகமாடி கல்யாணம் செய்து கொண்டதாக கதிரை கோமதியின் அண்ணன்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர். அதோடு ராஜியின் அண்ணன் குமார் இப்போது கதிரை தீர்த்துக்கட்ட பார்க்கிறார். கதிரை காலேஜுக்கு போகிற வழியில் அவரை தடுத்து நிறுத்தி தன்னுடைய நண்பர்களுடன் அடித்து துவைக்கிறார் குமார்.

‘ராஜி எடுத்துட்டு போன பணம், நகை எங்கே?’ என்று கேட்டு கேட்டு அடிக்கிறார். ‘வெள்ளம் தின்றது ஒருத்தன் விரல் சூப்புவது இன்னொருத்தன்’ என்பது போல் தான் கதிரின் நிலைமை ஆகிவிட்டது. குமார் அடித்த அடிக்கு எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் இருந்த கதிரை சரவணன் தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பின் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகிறார்.

Also Read: திருடிய பணத்தை முத்துவிடம் திருப்பி கொடுக்கும் மீனாவின் தம்பி.. யாருன்னு தெரியாமலே ஓவராக குதிக்கும் விஜயா

கதிருக்கு ஸ்கெட்ச் போட்ட மாமன்கள்

கதிரை குமார் அடித்துவிட்டார் என கேட்டதும் கோமதிக்கு கோபம் பொறுக்கல. முழு சொர்ணா அக்காவாகவே மாறி, தன்னுடைய அண்ணன்கள் வீட்டிற்கு சண்டைக்கு எகிறுகிறார். அவர் மட்டுமல்ல பாண்டியன் குடும்பமே இப்போது கொலவெறியில் இருக்கின்றனர். ஆனா, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறாயா கோமதி! என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

பேசாம வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாமல், தன்னுடைய அண்ணன்களிடம் ராஜி காலேஜுக்கு செல்வதை பெருமையாக பேசியதால்தான் இப்போது கதிரை குமார் பொளந்து கட்டி விட்டார். ‘இனிமேலாவது வாய கொஞ்சம் அடக்கி வாசி!’ என்று சின்னத்திரை சீரியல் ரசிகர்கள் கோமதியை கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

Also Read: பெற்ற மகனுக்கு எமனாக நிற்க போகும் விசாலாட்சி.. தர்ஷினியை பகடைகாயாக வைத்து ஆடும் குணசேகரன்

Trending News