Director Vetrimaran : தோல்வியே கொடுக்காத இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் வெற்றிமாறன் கடைசியாக விடுதலை படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருந்தனர். அதிலும் குறிப்பாக இளையராஜா இசையமைத்த வழிநடக காட்டுமல்லி பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
மேலும் இதுவரை காமெடி நடிகராக மட்டுமே பார்க்கப்பட்ட சூரியை வேறு ஒரு பரிமாணத்தில் வெற்றிமாறன் காட்டு இருந்தார். சூரியும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு செம்மையாக நடித்து இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி தனது பங்குக்கு பட்டையை கிளப்பி இருந்தார்.
இதைத்தொடர்ந்து விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடத்தில் இருந்து நடந்து வந்த நிலையில் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்நிலையில் நெதர்லாந்தில் ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விடுதலை முதல் மற்றும் இரண்டாம் பாகம் திரையிடப்பட்டது.
Also Read : விசுவாசத்தில் நாயை மிஞ்சிய சொக்கன்.. சசிகுமார், சூரி கூட்டணியில் வெளியான கருடன் கிளிம்ஸ் வீடியோ
மேலும் இரண்டு பாகத்தையும் பார்த்துவிட்டு திரையரங்குகளில் எல்லோரும் எழுந்து நின்ற ஐந்து நிமிடம் ஓயாமல் கைதட்டல் மூலம் கரவொலி எழுப்பி வெற்றிமாறனுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இவ்வாறு சர்வதேச அரங்கில் வெற்றிமாறனுக்கு விடுதலை படத்தின் மூலம் கௌரவம் கிடைத்துள்ளது.
மேலும் விடுதலை 2 படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்டனர். அதோடு மட்டுமல்லாமல் இப்போது வெற்றிமாறனின் திரைகதையில் அருண் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

Also Read : சூர்யா வரலனா கூட அந்த ஹீரோவை வைத்து வாடிவாசல் முடிப்பேன்.. 100% உறுதியாக இருக்கும் வெற்றிமாறன்