உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒவ்வொரு அணியிலும் இமாலய சிக்சர்களை பறக்கவிடும் வீரர்கள் நிச்சயம் இருப்பார்கள். முன்பெல்லாம் ஒரு போட்டியில் 2,3 சிக்சர்கள் அடிப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள ஐபிஎல், 20 ஓவர் போட்டிகள் என பந்துகள் குறைக்கப்பட்டதால், அடித்து ஆடும் வீரர்களுக்கு போட்டிகள் அனைத்தும் சாதகமாக மாறி விட்டது. அந்த வகையில் பாரபட்சமின்றி பவுலர்களை துவம்சம் செய்த வீரர்கள்.
ஹர்திக் பாண்டியா: இவர் இந்திய அணியில் 6வது மற்றும் 7வது இடத்தில் இறங்கக் கூடிய அதிரடி ஆல்ரவுண்டர். இவர் பிபிசிஎல் ,20 ஓவர் தொடரில் விளையாடும்போது, ஒரு போட்டியில் 20 சிக்சர்களை பறக்க விட்டுள்ளார். அந்த போட்டியில் 55 பந்துகளை சந்தித்த இவர் 158 ரன்களை குவித்து அதிக சிக்சர் அடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
கிறிஸ் கெய்ல்: கெய்ல் ஒருமுறை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் போது 18 சிக்சர்களை அடித்து சாதனை படைத்துள்ளார். 69 பந்துகளைச் சந்தித்த அவர் 146 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
கிரகம் நேப்பியர்: இங்கிலாந்து அணிக்காக முன்னர் விளையாடி வந்த நேப்பியர் 2008ஆம் ஆண்டு எக்ஸக்ஸ் அணிக்கு எதிராக 58 பந்துகளில் 152 ரன்கள் அடித்துள்ளார். இதில் 16 சிக்ஸ்சர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும்.
தாசன் சனகா: இலங்கை அணிக்கு தற்போது கேப்டனாக செயல்பட்டு கொண்டிருக்கும் சனகா நன்றாக அடித்து ஆடக்கூடிய வீரர். இவர் இலங்கையில் நடைபெற்ற ஒரு போட்டியில் 46 பந்துகளுக்கு 123 ரன்கள் குவித்துள்ளார். அதில் 16 சிக்சர்களை பறக்க விட்டுள்ளார்.
ஹர்ஷதுள்ளா சாசாய்: ஆப்கானிஸ்தான் அணிக்காக ஓபனிங் இருக்கக்கூடிய சாசாய், அயர்லாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் 16 சிக்சர்களை அடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச அளவில் இவர் படைத்த சாதனையை இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. அதிகபட்சமாக ஒரு நபர் 14 சிக்சர்களை மட்டுமே அடித்துள்ளார்.