செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அந்தரங்க மெசேஜ், கொலை மிரட்டல்.. சீரியல் நடிகையை நம்பி மோசம் போன அப்பாவி கணவர்

சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கக்கூடிய இந்த நடிகைக்கு என்று ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகரையே காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை, திடீரென்று அவரை விட்டு பிரிந்து வாழ துவங்கினார்.

கணவர், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் கொஞ்ச காலம் பிரிந்து வாழ முடிவெடுத்தனர் என நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அந்த அப்பாவி கணவர் மீது நடிகை மகளிர் காவல் நிலையத்தில் அதிரடியாக புகார் ஒன்றை அளித்தார்.

Also Read: அந்த பெங்களூர் தக்காளி நமக்கு தான் என காத்திருந்த நடிகர்.. உன் பருப்பு இங்க வேகாது என எஸ்கேப்பான நடிகை

தனியாக வசித்து வரும் தன்னுடைய செல்போனுக்கு அந்தரங்க மெசேஜ் அனுப்பி, கொலை மிரட்டல் விடுவதாக கணவர் மீது அந்த நடிகை பழி போட்டார். பிறகு கணவரையும் விசாரித்த போலீசார் இருவருக்கும் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம் என அட்வைஸ் சொல்லி அனுப்பி வைத்தனர்.

ஆனால் உண்மையாகவே கணவர் அப்படி எந்த ஒரு மிரட்டலையும், அந்தரங்க மெசேஜையும் அனுப்பவில்லை என்பது பின்னர் தான் தெரியவந்தது. அந்த அப்பாவி கணவர் மீது பழி போட்டு அவரை கெட்டவராக சித்தரித்து, அதற்காகத்தான் அவரை பிரிந்தேன் என்றும் கூறினார்.

Also Read: பிஞ்சிலேயே கள்ளிப்பால் ஊத்தி கொன்று இருக்கணும்.. 15 வயதில் 45 நிமிடங்கள் இடைவிடாது கிஸ் அடித்த ஹீரோ

இப்போது கணவரைப் பிரிந்து வாழும் நடிகை சந்தோசமாக இருப்பது நன்றாகவே தெரிகிறது. ஏனென்றால் சமூக வலைதளத்தில் இவர் தாராளமாக கவர்ச்சியை காட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் ஜன்னல் வைத்த ஜாக்கெட் அணிந்து கவர்ச்சியாக சேலை உடுத்தி இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல அவர் ஆண் நண்பருடன் நெருங்கி பழக்குவது அப்பட்டமாகவே தெரிகிறது.

Trending News