சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

இவ பிள்ளைக்கு அப்பா ஆக மாட்டான், இன்னொருத்தன் பிள்ளைக்கு அப்பாவா.! மானங்கெட்ட பொழப்புடா பாரதி

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பத்து வருடங்களாக பாரதியை மனைவியிடம் இருந்து பிரித்து வைத்திருக்கும் வெண்பா அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள போராடுகிறார். அதற்காக இப்பொழுது நயவஞ்சகத்தின் உச்சத்துக்கே சென்று படு கேவலமான வேலையை பார்த்திருக்கிறார்.

வெண்பாவை பாரதியிடம் இருந்து எப்படியாவது பிரிக்க வேண்டும் என சௌந்தர்யா, அவருக்கு ரோகித்துடன் நிச்சயதார்த்தத்தை நடத்தி திருமண தேதியும் குறித்து விட்டனர். திருமணத்திற்கு முன்பு வெண்பா ரோகித்துடன் ஹோட்டலில் தவறு செய்துவிட்டதால் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார்.

Also Read: பொழச்சு போ.. மண்டபத்தில் கோபியின் ஆணவத்தை அடக்கிய மனைவி

இதனால் வயிற்றில் வளரும் குழந்தையை பகடைக்காயாக பயன்படுத்தி, பாரதியை திருமணம் செய்து கொள்ள வெண்பா பிளான் போட்டிருக்கிறார். தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் அப்பா என்றே தெரியவில்லை.

நண்பர்களுடன் குடித்துவிட்டு தன்னையே மறந்த போது இப்படி ஒரு தவறு நடந்து விட்டது. ஆகையால் எனக்கும் எனது குழந்தைக்கும் சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வெண்பா, பாரதியின் காலில் விழுந்து கதறுகிறார்.

Also Read: நயவஞ்சகத்தின் உச்சத்துக்கே சென்ற வெண்பா.. முட்டாள் பாரதியை வெளுத்து வாங்கிய கண்ணம்மா

முதலில் இதற்கு மறுத்த பாரதி, அதன் பிறகு வெண்பா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தால் வேறு வழி இல்லாமல் அவர் கழுத்தில் தாலி கட்ட சம்மதித்திருக்கிறார். இதனால் சௌந்தர்யா உள்ளிட்ட அனைவரும் வாதத்தின் முடிவால் ஷாக் ஆகி உள்ளனர்.

இப்படி தன்னுடைய இரண்டு மகள்களுக்கு அப்பாவாக இருக்க முடியாத பாரதி, யாரோ ஒருவனுடைய குழந்தைக்கு அப்பாவாக போவதை பார்த்ததும் சின்னத்திரை சீரியல் ரசிகர்கள் பாரதிகண்ணம்மா சீரியலை சோசியல் மீடியாவில் வறுத்தெடுக்கின்றனர்.

Also Read: அர்ச்சனாவுக்கு டஃப் கொடுக்க வரும் விஜய் டிவியின் அராத்து.. இந்த சீசனில் நிச்சயம் சம்பவம் இருக்கு

Trending News