ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

ரஜினிகாந்த், லதாவை திருமணம் செய்ய இப்படி ஒரு காரணமா?. பலே திட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்

Rajinikanth – Latha Rajinikanth: ரஜினிகாந்த், லதா தம்பதியினருக்கு திருமணம் ஆகி கிட்டதட்ட 42 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்று வரை இவர்களுடைய திருமணத்தைப் பற்றி நிறைய சர்ச்சை செய்திகள் இருக்கின்றன. ரஜினிகாந்த் எதற்காக லதாவை திருமணம் செய்தார் என்ற கேள்விக்கு இணையதளத்தில் ஏகப்பட்ட பதில்கள் இருக்கின்றன. அந்த அளவுக்கு சர்ச்சையான திருமணம் தான் இவர்களுடையது.

ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்த பொழுது தன்னுடைய கல்லூரி சார்பாக பேட்டி எடுக்க வந்த லதாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்லூரி மாணவி என்பதையும் தாண்டி பிரபல நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் மனைவி சுதாவின் உடன் பிறந்த தங்கை தான் லதா ரஜினிகாந்த். ரஜினி மற்றும் லதா குறுகிய காலத்திலேயே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி.

Also Read:இந்தியளவில் ரஜினிக்கு அதிக சம்பளத்தை வாரி இறைக்கும் சன் பிக்சர்ஸ்.. இவ்வளவுவா? தலை சுற்ற வைத்த மாறனின் பதில்

ரஜினி, லதாவை காதலித்ததாகவும், ஆனால் லதாவின் வீட்டில் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றும் நிறைய செய்திகளில் வெளியாகி இருக்கிறது. அப்போது எம்ஜிஆர் தான் லதாவின் வீட்டில் பேசி திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் சொல்லுவார்கள். ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை. ரஜினிக்கும், லதாவிற்கும் திருமணம் நடப்பதற்கு முக்கிய காரணம் ஒய் ஜி மகேந்திரா தான்.

ரஜினி மற்றும் ஒய் ஜி மகேந்திரா நிறைய படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இதனால் இவர்களுக்குள் நல்ல நட்பும் இருந்திருக்கிறது. அவருடைய மனைவி நல்ல அழகாகவும், வெள்ளையாகவும் இருப்பாராம். தனக்கும் இதேபோன்று வெள்ளை வெளேரென்று இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசை எனவும், உங்கள் மனைவியின் தங்கையை எனக்கு திருமணம் செய்து தாருங்கள் என்றும் ரஜினி கேட்டிருக்கிறார்.

ஒய் ஜி மகேந்திராவும், கரும்பு தின்ன கூலியா என்பது போல் தன்னுடைய மச்சினிச்சியை வீட்டில் பேசி திருமணம் செய்து வைத்திருக்கிறார். இது முழுக்க முழுக்க ரஜினியே ஆசைப்பட்டு செய்த திருமணம். லதாவும் ரஜினியை முதலில் பார்த்த பொழுதே அவர் மீது தனக்கு ஈர்ப்பு இருந்ததாகவும் ஒரு சில பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.

ரஜினி சினிமாவுக்கு வந்த புதிதில் அவருடைய நிறத்தால் நிறைய பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். ரஜினி கருப்பாக இருப்பதால் அவருடன் நடிக்க மாட்டேன் என நிறைய ஹீரோயின்கள் சொல்லி இருக்கிறார்கள். இதனால்தான் என்னவோ வெள்ளையாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பலே திட்டம் தீட்டி லதாவை திருமணம் செய்திருக்கிறார்.

Also Read:எப்படியாவது தலைவர் ரஜினி கூட நடிக்கணும்.. வரிஞ்சு கட்டி வந்த 5 நடிகர்கள் ?

Trending News