சனிக்கிழமை, நவம்பர் 9, 2024

TVK கட்சி கொடிக்கு எதிராக கிளம்பிய பஞ்சாயத்து.. தேசிய கட்சி வைத்த செக், தளபதியின் ரியாக்சன் என்ன.?

Tvk-Vijay: இன்று காலை தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கொடியை ஏற்றி வைத்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார் விஜய்.

சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் அந்த கொடியில் இரட்டை யானைகளுக்கு நடுவில் வாகை மலர் இடம் பெற்றிருந்தது. இதை பார்க்கும் போது வெற்றிக்கான அடையாளம் என்பது தெளிவாக தெரிகிறது.

அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில் பெவிகால் லோகோ போல் இருக்கிறது. கொடி டிசைன் கூட காப்பி என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில் கட்சியின் கொடி குறித்து மற்றொரு பஞ்சாயத்து எழுந்துள்ளது.

அதாவது அந்த கொடியில் இடம் பெற்றுள்ள யானை பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமாகும்.. இப்படி அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி ரொம்பவும் தவறானது.

பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்ப்பு

அதனால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உடனடியாக கொடியில் இருக்கும் யானை படத்தை நீக்க வேண்டும். இல்லை என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்போம் என தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதான் இப்போது பரபரப்புக்கு காரணமாக இருக்கிறது.

கட்சி கொடியை ஏற்றி ஒரு நாள் கூட முழுதாக முடியவில்லை. அதற்குள்ளாக இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்கிறது ஏற்கனவே கட்சி பெயரை அறிவித்தபோது சில சர்ச்சைகள் எழுந்தது. அதேபோல் தற்போது முளைத்திருக்கும் இந்த பிரச்சினையை விஜய் நிச்சயம் சரி செய்து விடுவார்.

அது மட்டுமே இன்றி இது போன்ற விஷயங்களை எல்லாம் தீர யோசிக்காமல் அவர் தன்னுடைய கட்சியின் கொடியில் யானை படத்தை பயன்படுத்தி இருக்க மாட்டார். அதனால் விரைவில் இது குறித்த விளக்கம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் கட்சி கொடியில் இருக்கும் சர்ச்சை

- Advertisement -spot_img

Trending News