Vijay – Ajith : பொதுவாக பண்டிகை நாட்களில் பெரிய கடைகளில் ஆஃபர் போடுவார்கள். இந்த பொருள் வாங்கினால், இந்த பொருள் இலவசம் அல்லது பொருள்களின் விலை பாதியாக குறைத்தும் விற்கப்படும். இப்போது அதே போல் தான் பிரபல தியேட்டர் ஒன்று விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு நச்சென்று ஒரு ஆஃபர் கொடுத்திருக்கிறார்கள்.
அதாவது சென்னையில் பிரபல தியேட்டரில் ஒன்று தான் கமலா சினிமாஸ். இதில் இந்த வார விடுமுறைக்கு யாரும் எதிர்பார்க்காத செம ஆஃபர்களை வாரி வழங்கி இருக்கிறது. அதாவது அஜித்தின் படங்களை எடுத்துக் கொண்டால் திரும்பத் திரும்ப பார்க்கும் படியான படங்கள் சில இருக்கும்.
அதில் பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருக்கும் விசுவாசம் படம் மீண்டும் தியேட்டரில் திரையிடப்படுகிறது. இதற்கான விலை வெறும் 49 ரூபாய் என தியேட்டர் நிர்ணயித்துள்ளது. அடுத்ததாக சமீபத்தில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் நடிப்பில் லியோ படம் வெளியானது.
Also Read : அஜித்துக்காக ஓடிவந்த ரஜினி.. கண்டும் காணாமல் கை கழுவிய விஜய்
இந்த படம் தியேட்டரில் கிட்டத்தட்ட 600 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. மேலும் இன்று நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் லியோ படம் வெளியாகிவிட்டது. இந்த சூழலில் தியேட்டருக்கு சென்று ரசிகர்கள் லியோ படத்தை பார்ப்பார்கள் என்பது சந்தேகம் தான். இதனால் பாதி திரையரங்குகளில் லியோ படத்தை தூக்கி விட்டனர்.
தீபாவளி பண்டிகைக்கு ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் வெளியானதால் லியோ படம் குறைந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இந்த சூழலில் கமலா சினிமாஸ் திரையரங்கம் வெறும் 59 ரூபாய்க்கு லியோ படத்தின் டிக்கெட் விலையை நிர்ணயித்திருக்கிறது.
மேலும் ஆஃபர் என்ற பெயரில் விஜய் மற்றும் அஜித்தின் பெயரை இப்படி டேமேஜ் செய்து விட்டதாகவும் சிலர் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இப்படி ஆஃபர் கொடுத்தாலும் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆர்வமாக இருப்பார்கள் என்பதும் சந்தேகம்தான்.
Also Read : முன்னணி ஹீரோக்களின் 25வது படங்கள்.. இந்த விஷயத்தில் விஜய்யை முந்திய அஜித்