வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

50வது நாளில் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுக்கும் பழைய போட்டியாளர்.. குழாயடி சண்டைக்கு குருநாதர் போட்ட அஸ்திவாரம்

Vijay Tv: பிக் பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 40 நாட்களை தாண்டி இருக்கிறது. இதில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா மற்றும் ரியா என ஐந்து போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். மேலும் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்க்கு 13 பேர் சிக்கிருக்கிறார்கள். அதில் வழக்கம்போல் முத்துக்குமார் மற்றும் ஜாக்லின் தொடர்ந்து நாமினேட் ஆகி வருகிறார்கள்.

இருந்தாலும் ஒவ்வொரு முறையும் இவர்கள் மக்களால் காப்பாற்றப்படுகிறார்கள். அந்த வகையில் அதிக ஓட்டுக்களை பெற்ற முதல் இடத்தில் இருப்பது முத்துக்குமார் தான். அத்துடன் கடைசியாக இப்பொழுது வரை கம்மி ஓட்டுகளில் இருப்பது விஷப்பாட்டிலாக இருக்கும் ஆர்ஜே ஆனந்தி தான். அந்த வகையில் எப்படியும் இந்த வாரத்தில் ஆனந்தி வெளியே போக வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் இந்த பிக் பாஸ் சீசனை இன்னும் சூடு பிடிக்க வைப்பதற்கும் உள்ளே மிகப்பெரிய குழாயடி சண்டை வேண்டும் என்பதற்காகவும் குருநாதர் ஒரு தரமான அஸ்திவாரத்தை போட்டு இருக்கிறார். அந்த வகையில் இன்னும் ஒரு வாரத்தில் 50-வது நாள் நெருங்கப் போகிறது. அதை முன்னிட்டு இந்த சீசனில் எலிமினேட் ஆகிப்போன ஒரு போட்டியாளரை மீண்டும் உள்ளே அனுப்பப் போகிறார்கள்.

அந்த வகையில் உடல்நிலை பிரச்சினை இருப்பதால் ரவீந்தர் போக வாய்ப்பில்லை. மீதம் இருக்கும் அர்னவ், தர்ஷா, சுனிதா மற்றும் ரியா. இவர்களில் உள்ளே போக அதிக வாய்ப்பு இருப்பது சுனிதா தான். ஏனென்றால் இவர்தான் கேமை சூப்பராக விளையாண்டார் என்று சொல்லும் அளவிற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்.

ஆனால் அப்படிப்பட்டவர் வெளியே வந்து விட்டதாலும் தற்போது வெளியே இருந்து பல விஷயங்களை பார்த்ததால் போட்டியாளர்கள் பற்றி ஒரு மனநிலைக்கு வந்திருப்பார். அதனால் மீண்டும் இவரை உள்ளே அனுப்பினால் பிக் பாஸ் கேம் வேற மாதிரி சூடு பிடிக்க வாய்ப்பு இருக்கும். அத்துடன் அடிதடி சண்டைக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு ஈடு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சுனிதா போக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இருந்தாலும் பிக் பாஸ் பொறுத்த வரை எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல் பழைய போட்டியாளர்கள் யாரையாவது உள்ளே அனுப்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. யார் உள்ளே போகிறார்? யார் கேமை மாற்றி விளையாடப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News