சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

என்ன கொடுமடா இது! விஜயகாந்துன்னு சொல்லிட்டு இமான் அண்ணாச்சி உருவத்தில் திறந்த சிலை

Actor Vijayakanth : பொதுவாக இறந்த தலைவர்களுக்கு சிலை வைப்பது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ சிலை வைத்த போதும் மிகப்பெரிய பிரச்சனை இருந்தது. அவரின் உருவசிலை நடிகை காந்திமதியின் சாயலில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் பெயரில் இப்போது நிறைய நல திட்டங்களை அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் செய்து வருகிறார்கள். அவரது சமாதியில் தினமும் மதிய உணவு இலவசமாக கொடுத்து வருகிறார்கள்.

மேலும் இன்று கூட ஆர்யா மற்றும் விஷால் இருவரும் விஜயகாந்தின் பெயரில் மக்களுக்கு அன்னதானம் வழங்கிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. இந்த சூழலில் விஜயகாந்த்-க்கு தர்மபுரியில் சிலர் சிலை வைத்து உள்ளனர். இந்த சிலை தான் இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

Also Read : புத்தாண்டு மயக்கம் தெளிந்த விஷால்.. விஜயகாந்த் சமாதியில் கண்ணீரோடு போட்ட பெர்ஃபாமன்ஸ்

விஜயகாந்தின் சிலையை பார்ப்பதற்கு காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி போல் இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு, சிலை செய்தவர்களுக்கு நெட்டிசன்கள் வலைவீச்சு என்று பதிவிட்டு இருக்கிறார்.

விஜயகாந்தை அசிங்கப்படுத்தும் விதமாகத்தான் இந்த சிலை இருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் இப்போது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த சிலையை எடுத்து விட்டு மீண்டும் தத்ரூபமான விஜயகாந்தின் உருவ சிலையை வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

vijayakanth
vijayakanth

Also Read : ரத்தமும் சதையமா இருந்துட்டு இந்த அஞ்சு பேரு சாவுக்கு கூட போகாத வடிவேலு.. விஜயகாந்த் ஆல் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி

Trending News