திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இரண்டு வருடமாக காணாமல் போன இயக்குனர்.. லைக்கா உடன் சேர்ந்து விஜய் சேதுபதி கொடுக்கும் வாய்ப்பு

Vijay Sethupathi : லைக்கா நிறுவனம் இப்போது மிகுந்த நெருக்கடியில் இருந்து வருகிறது. ஏனென்றால் லைக்கா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

சூப்பர் ஸ்டாரை தூண்டில் போட்டு வசூலை அள்ளிவிடலாம் என கனவில் இருந்த லைக்காவுக்கு லால் சலாம் படம் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் நஷ்டத்தை சம்பாதித்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு நடத்த முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கியது.

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ள லைக்கா அடுத்ததாக விஜய் சேதுபதியின் படத்தை எடுக்க இருக்கிறது. தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் தான் விஜய் சேதுபதி பிஸியாக இருந்து வருகிறார்.

விஜய் சேதுபதி உடன் இணைத்த பாண்டிராஜ்

இப்போது இரண்டு வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த பாண்டிராஜுக்கு விஜய் சேதுபதி வாய்ப்பு கொடுத்திருக்கிறார். பசங்க படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாண்டிராஜ் கடைசியாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கியிருந்தார்.

அடுத்ததாக விஷால் போன்ற நடிகர்களிடம் கதை கூறி வந்த நிலையில் இப்போது விஜய் சேதுபதி உடன் கூட்டணி போட இருக்கிறார். அதோடு லைக்கா இந்த படத்தை தயாரிப்பதால் கண்டிப்பாக பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விஜய் சேதுபதி இப்போது மிஷ்கினின் ட்ரெயின் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை முடித்த நிலையில் பாண்டிராஜ் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Trending News