Bigg Boss Tamil 8: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கி தற்போது 88 நாட்களைக் கடந்து வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது. அந்த வகையில் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் உள்ளே கிட்டத்தட்ட 10 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள். அதனால் இந்த வாரமும் டபுள் எவிக்சன் பண்ணுவதற்கு பிக் பாஸ் தயாராக இருக்கிறது.
இதற்கிடையில் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பின்னாலே டாஸ்கை யார் வின் பண்ணுகிறார் என்ற விதத்தில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கடுமையான முயற்சிகளை எடுத்து வந்தார்கள். இதில் யார் அதிகமான புள்ளிகளை பெற்றிருக்கிறார்களோ அவர்களே நேரடியாக பைனலுக்கு போவார்கள் என்று பிக் பாஸ் அறிவிப்பு கொடுத்திருந்தார்.
அந்த வகையில் திங்கட்கிழமை ஆரம்பித்து இன்று வரை ஐந்து நாட்கள் இந்த டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் நேற்று நடந்த டாஸ்க் வரை முன்னணியில் இருந்தது யார் என்றால் முத்துக்குமரன், ரயான், விஷால். ஆனால் நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் புள்ளிகள் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அதாவது விஷால், பவித்ரா, ஜாக்லின் மற்றும் அருண் இவர்களின் பாயிண்டுகள் மொத்தமாக இவர்களிடம் இருந்து பறிபோய்விட்டது.
இதனால் இவர்களுக்கு எந்த பாயிண்டுகளுமே இல்லாமல் போய்விட்டது. அடுத்ததாக மஞ்சரிக்கு வந்த போன் டாஸ்க்கில் யாராவது ஒரு போட்டியாளரை தேர்வு செய்து அவர்களுடைய தலையில் கலரிங் செய்ய வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மஞ்சரி, முத்துக்குமாரை தேர்வு செய்திருந்தால் அவர் நிச்சயமாக பாய்ண்ட் வேணும் என்பதற்காக கலரிங் பண்ணி இருப்பார்.
ஆனால் அப்படி பண்ணி இருந்தால் முத்துக்குமார் பாய்ண்டு கூடிவிடும் என்பதால் மஞ்சரி சூழ்ச்சி பண்ணி ரயானுக்கு அந்த டாஸ்கை கொடுத்தார். மஞ்சரி சொன்னபடி ரயான் தலையில் கலரிங் பண்ணிவிட்டார். அதனால் அவருக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்துவிட்டது. அந்த வகையில் இந்த ஒரு டாஸ்க் மூலம் முத்துக்குமார் 19 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திற்கு போய்விட்டார்.
ஆனால் ரயான் 21 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை தக்க வைத்து டிக்கெட் டு ஃபினாலே வின் பண்ணி நேரடியாக பைனலுக்கு தகுதியாகிவிட்டார். பேச்சுத் திறமை இருந்தால் போதும் முன்னேறி விடலாம் என்று நினைப்பிலிருந்த முத்துக்குமாரனுக்கு மொத்தமாக ரயான் ஆப்பு வைத்து விட்டார். மேலும் இந்த வாரம் நாமினேஷனில் ரயான் இருந்தாலும் மக்களிடம் அவருக்கு அதிகமான புள்ளிகள் கிடைத்து இருப்பதால் நிச்சயம் வெளியேற வாய்ப்பில்லை.
ஆனால் மஞ்சரி கம்மியான ஓட்டுகளை பெற்றிருப்பதால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார். அத்துடன் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதால் மஞ்சரிக்கு அடுத்து கம்மியான ஓட்டுகளை பெற்றிருப்பது அருண் மற்றும் பவித்ரா தான். அந்த வகையில் இவர்களில் யார் வெளியேறப் போகிறார் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.