புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விஜய் போட்ட தெளிவான ஸ்கெட்ச்.. லியோ, தளபதி 68 படங்களுக்கு சொன்ன குட் நியூஸ்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி முடிந்த நிலையில் இன்னும் இறுதி கட்டப் படப்பிடிப்பு மட்டுமே உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தளபதி 68 படத்தின் அப்டேட் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அதாவது முதல்முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த செய்தி இப்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படங்களைப் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Also Read : எங்க 100-வது படம் நீங்கதான்.. விஜய் கால் சீட் கொடுத்தும் கண்டுக்காத பிரம்மாண்ட நிறுவனம்

அதாவது லியோ படத்தின் சூட்டிங் வருகின்ற ஜூன் 15 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறதாம். மேலும் சிஜி போன்ற பின்னணி வேலைகளை முடித்துவிட்டு அக்டோபர் மாதத்தில் லியோ படம் திரைக்கு வர இருக்கிறது. அதன்பின்பு ஜூலை மாதம் முழுவதும் விஜய் ஓய்வெடுக்க உள்ளாராம்.

இதைத்தொடர்ந்து தளபதி 68 படத்திற்கு விஜய் ஆயத்தமாகி, ஆகஸ்ட் 18 ஆம் தேதியிலிருந்து படப்பிடிப்பு தொடக்க இருக்கிறது. மாநாடு வெற்றியைத் தொடர்ந்து நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி படுமோசமான தோல்வியை தழுவியது.

Also Read : பிளாப் படத்தை பார்த்து உஷாரான தளபதி விஜய்.. அடுத்த விக்னேஷ் சிவன் நீங்க தான் ப்ரோ

இப்படி தளபதி படத்தையும் சொதப்பி விட கூடாது என வெங்கட் பிரபு முழு வீச்சில் கதை எழுதும் பணியில் இறங்கி உள்ளாராம். ஏற்கனவே இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரியை விஜய்யிடம் வெங்கட் பிரபு சொல்லி உள்ளார். இதைக் கேட்டு விஜய் இம்ப்ரஸ் ஆகி தான் தளபதி 68 பட வாய்ப்பு அவருக்கு கொடுத்துள்ளார்.

இந்த படம் மட்டும் வெங்கட் பிரபுவுக்கு சக்சஸ் ஆனால் அவரது மார்க்கெட் எங்கேயோ போய்விடும். இதனால் மனுஷன் தீயாய் வேலை பார்க்க களத்தில் இறங்கி உள்ளார். மேலும் லியோ படத்தின் அப்டேட்டுக்காக விஜய் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தளபதி 68 அப்டேட் ரெண்டு லட்டு சாப்பிடுவது போல் செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

Also Read : தளபதி 68க்கு அவர் வேண்டவே வேண்டாம்.. வெங்கட் பிரபுவின் அடிமடியில் கைவைத்த விஜய்

Trending News