ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

SK-23 அடுத்த படம் அப்டேட்.. தோல்வி இயக்குனரை நம்பி 400 கோடி பட்ஜெட்டில் செய்ய போகும் தரமான சம்பவம்

An update on the director’s mega budget film after SK 23: ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களுடன் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் ஒருவருக்கு கடந்த சில வருடங்களாகவே நேரம் சரியில்லை. அவர் எடுக்கிற படம் எல்லாம் படு தோல்வி அடைகிறது. ஆனால் இப்போது அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல் பாலிவுட் கிங்கின் படத்தை 400 கோடி பட்ஜெட்டில் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சிவகார்த்திகேயனின் 23வது படமான எஸ்கே 23 படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி முடித்துவிட்டு அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் இணைகிறார். ஏற்கனவே அமீர்கான் நடிப்பில் கஜினி படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸை தெறித்து விட்டார். அதன் பின் அவர் எந்த ஹிந்தி படத்தையும் இயக்கவில்லை.

இவருடைய இயக்கத்தில் கடந்த சில வருடங்களாகவே வெளியாகும் படங்கள் எதுவும் சரியாக ஓடுவதில்லை. விஜய்யின் சர்கார், ரஜினியின் தர்பார் போன்றவை எல்லாம் ஏஆர் முருகதாஸின் தோல்வி படமாகவே பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட தோல்வி இயக்குனருடன் சல்மான் கான் துணிச்சலுடன் கைக்கோர்த்து ஆச்சரியப்படுத்துகிறது.

Also Read: எஸ்கே 21-ன் ஒன் லைன் ஸ்டோரி.. தளபதி விஜய் படத்தின் அட்டகாப்பியா?.

ஏஆர் முருகதாஸின் மெகா பட்ஜெட் படத்தின் அப்டேட்

அதுவும் இந்த படத்தை 400 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் ஷூட்டிங்கை போர்ச்சுக்கல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நடத்த பிளான் போட்டிருக்கின்றனர். இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் ஜானலில் மெகா பட்ஜெட்டில் ஒரு குளோபல் ஆக்சன் என்டர்டைன்மென்ட் மூவியாக உருவாக போகிறது.

எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங்கை எப்படியும் ஏஆர் முருகதாஸ் வருகிற மார்ச் மாதத்தில் துவங்கி விடுவார். அந்த படத்தின் மூலம் மறுபடியும் கம்பேக் கொடுப்பார். ஆனா அதற்கு முன்பே இவர் அடுத்தடுத்து பெரிய பெரிய ப்ராஜெக்டை கைப்பற்றுகிறார். மேலும் எஸ்கே 23 படப்பிடிப்பு முடிந்ததும் உடனே சல்மான் கான் படத்தை துவங்க உள்ளாராம். இந்த படத்தை வரும் 2025 ஆம் ஆண்டு ரம்ஜான் ஸ்பெஷல் ஆக ரிலீஸ் செய்யவும் ப்ளான் போட்டிருக்கின்றனர்.

Also Read: விஜய் இன்று வரை ஒதுக்கி வைத்திருக்கும் 3 இயக்குனர்கள்.. பல கோடி கொடுத்தாலும் தளபதி கிட்ட வேலைக்கு ஆகாது

Trending News