வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பல கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கிய ஆனந்த் அம்பானி மாமியார்.. இவுங்களும் சலைச்சவங்க இல்லை!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் நிறுவன அதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஜியோ வேர்ல்ட் கன்வென்சன் மையத்தில் திருமணம் கோலாகமலாக நடந்தது.

இத்திருமணத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து தொழிலதிபர்கள், நடிகர்கள், பாப் பாடகர்கள், இந்திய திரை நட்சத்திரங்கல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இத்திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடந்தது. சில நாட்களாக இந்த நிகழ்ச்சி ஆடம்பரமாக நடந்த நிலையில், இந்த திருமணத்திற்காக மட்டும் ரூ.4 ஆயிரம் கோடியை அம்பானி குடும்பம் செலவழித்ததாக தகவல் வெளியானது. இதை பலரும் டிரோலும் செய்தனர்.

ராதிகா மெர்சண்ட் இந்திய மருத்தவ நிறுவனமான என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருந்த நிலையில், தற்போது இயக்குனர் குழுவில் இடம்பெற்றுள்ளார். அவரது தந்தை வீரேன் மெர்ச்சண்டின் தந்தை ஆவார். அம்பானி குடும்பத்துடன் சம்பந்தம் செய்து கொண்ட ராதிகாவின் குடும்பம் வசதியான குடும்ப என்பதால் இவர்கள் அனைத்து மீடியாக்களிலும் இடம்பெற்றனர்.

ஷைலா மெர்சண்ட் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு

இந்த நிலையில் ஆனந்த் அம்பானியின் மாமியாரும் ராதிகா மெர்ச்சண்டின் அம்மாவுமான ஷைலா மெர்சண்ட் மும்பையின் பிரஸ்டீஜ் ஓசியன் டவரில் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். இது 2,486 சதுர அடி பரப்பளவிலும், 83 சதுர அடி பால்கனியுடன் அமைந்துள்ள நிலையில் இதன் விலை ரூ.20.76 கோடி என கூறப்படுகிறது. மும்பையின் கடல் அழகை இங்குள்ள பால்கனியில் இருந்தபடியே பார்த்து ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4 கார் பார்ங்கிங் வசதிகளுடன் கூடிய இந்த அடுக்குமாடி குடியிருப்பை கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி அன்று ராதிகா மெர்ச்சண்டின் குடும்பம் பதிவு செய்ததாகவும், இது மும்பையில் பிரதான பகுதியில் அமைந்துள்ளதால் இந்த இடத்திற்கு இன்னும் சில ஆண்டுகளில் அதிக விலை போகும் என கூறப்படுகிறது. அதன்படி, இக்குடியிருப்புக்கு ரூ.1.03 கோடி முத்திரை தொகையாகவும், பதிவுக் கட்டணமகா ரூ.30 ஆயிரமும் செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகின்றன.

எந்த நிறுவனத்தின் குடியிருப்பு தெரியுமா?

தெற்கு மும்பையில் அமைந்துள்ள பிரபலமான இந்த குடியிருப்பை பெங்களூரைச் சேர்ந்த பிரெஸ்டீஜ் குழுமத்தின், பிரெஜ்டீஜ் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் விற்பனை செய்துள்ளதாகவும், இங்கு ஒரு சதுர அடி ரூ.80,936 என்ற விலையில் விற்பனையாகி வருவதாகவும், பாலிவுட் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என முக்கிய பிரபலங்கள் தான் இப்பகுதியில் வீட்டுமனைகளை வாங்கிக் குவித்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

Trending News