புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிங்க பெண்ணே சீரியலில் கொலையான நந்தா, பழியை சுமக்கும் ஆனந்தி.. மித்ராவை முந்திக்கொண்டு போட்டு தள்ளிய அந்த நபர்

Singapenne: சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியலில் யாருமே எதிர்பார்க்காத திருப்பம் ஒன்று நடந்திருக்கிறது. கடந்த வாரம் முழுக்க ஆனந்தி, மகேஷ், அன்பு என்ற முக்கோண காதலை மையமாகக் கொண்டே சீரியல் ஒளிபரப்பப்பட்டது. இதனாலேயே ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பும் ஏற்பட்டது.

ஆனால் இந்த வாரம் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கும் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். நந்தா போலீசில் மாட்டிய போது அவன் எப்படியாவது மித்ராவின் பெயரை சொல்லிவிட வேண்டும் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

நேற்றைக்கு முந்தைய நாள் எபிசோடில் நந்தா என்னை மாஜிஸ்திரேட்டிடம் கூட்டிக்கொண்டு போங்கள், நான் அங்கு தான் உண்மையை சொல்வேன் என சொல்வது போல் காட்டப்பட்டிருந்தது. இதனால் கண்டிப்பாக நந்தா மித்ராவின் பெயரை சொல்லி விடுவான் என்று தான் ரசிகர்கள் நினைத்திருந்தார்கள்.

ஆனால் நேற்றைய எபிசோடில் திடீரென போலீஸ் ஹாஸ்டலுக்கே வந்து ஆனந்தியை கைது செய்து அழைத்துக் கொண்டு போனார்கள். எதற்காக இந்த கைது என எல்லோருமே குழம்பி இருந்த நிலையில் பிணவறைக்கு அழைத்துச் சென்று நந்தாவின் உடலை காட்டிய போது தான் இந்த எதிர்பாராத திருப்பம் ரசிகர்களுக்கு புரிந்திருக்கும்.

அதாவது மாஜிஸ்திரேட் முன்னிலையில் நந்தாவை ஆஜர் படுத்த அழைத்துக் கொண்டு போன வழியில் அவனை யாரோ கொலை செய்திருக்க கூடும். ஆனந்தி தான் கடைசியாக நந்தாவுடன் நெருங்கி பழகிய ஆள் என்பதால் சந்தேகத்தின் பெயரில் அவளை கைது செய்து இருக்கிறார்கள்.

மித்ராவை முந்திக்கொண்டு போட்டு தள்ளிய அந்த நபர்

தற்போது இந்த பிரச்சனையில் இருந்து ஆனந்தியே அன்பு மற்றும் மகேஷ் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் அடுத்த கட்ட கதை. நந்தா இறந்துவிட்டான் என்றதுமே எல்லோருக்குமே மித்ரா மீதுதான் சந்தேகம் வந்திருக்கும்.

ஆனால் உண்மையில் நந்தாவை, கம்பெனிக்கு தேடி வந்து தன் பெண்ணை ஏமாற்றியதாக குற்றம் சாட்டிய அந்த பெரியவர் தான் கொலை செய்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நந்தாவை பற்றி முழுதாக விசாரிக்கும் போது கண்டிப்பாக இதில் மித்ராவின் பெயர் சிக்குவதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த கொலை பழியில் இருந்து ஆனந்தியை அன்பு எப்படி காப்பாற்றுகிறான் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News