கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணம் என தெரிந்து கொள்ளும் ஆனந்தி.. பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறாள் என்று டாக்டர் சொல்லியதிலிருந்தே அவள் ஆனந்தி அன்புவிடம் இருந்து விலக ஆரம்பித்து விட்டாள்.

இது அன்புக்கு ஒருவித கலக்கத்தை கொடுக்கிறது. அதே நேரத்தில் ஆனந்திக்கு என்ன ஆயிருக்கும் என்ற சந்தேகத்தில் அவளுடைய அம்மா பயப்படுவதால் ஆனந்தியை நேரில் சந்திக்க அழகப்பன் உடன் சென்னைக்கு புறப்படுகிறார்.

மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்று சொல்வார்கள். ஆனால் ஆனந்தி விஷயத்தில் அவள் தெளிவாக இல்லை.

பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே!

கர்ப்பமாக இருக்கிறோமோ என்ற சந்தேகம் அவளுக்கே வருகிறது. அதற்கு காரணம் அந்த பார்ட்டிக்கு பிறகு அவள் ரொம்பவும் சோர்வுடன் காணப்பட்டது தான்.

மருத்துவமனையில் வீரமாக பேசிவிட்டு வரும் ஆனந்தி ஹாஸ்டலுக்கு வந்ததும் நிலை குலைந்து போய்விடுகிறாள்.

அவளுடைய மனசாட்சியே அவளிடம் நீ கர்ப்பமாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது தானே என்று கேட்கிறது.

இதிலிருந்தே ஆனந்திக்கு பார்ட்டியில் நடந்த சம்பவம் இன்னும் மறக்கவில்லை என்பது தெரிகிறது. அவள் அதிகமாக அந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தி பார்க்கும் பொழுது மகேஷ் அந்த அறைக்கு வந்ததிலிருந்து எல்லாமே ஞாபகம் வர வாய்ப்பு இருக்கிறது.

தன்னுடைய கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணம் என்று ஆனந்திக்கு தெரிந்து விட்டால் அவள் எந்த மாதிரி முடிவு எடுப்பாள் என்று பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் இன்றைய புரோமோ வில் காட்டியபடி ஆனந்தி இரண்டாவது பரிசோதனை பண்ணி பார்க்கும் பொழுது கர்ப்பமாக இல்லை என்று அறிக்கை வரவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment