ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

சிங்கப்பெண்ணில் அன்புவின் பேச்சை மீறும் ஆனந்தி.. சூழ்நிலையை சாதகமாக்கும் மகேஷ்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியிடம் காதலை தெரிவித்து ஆக வேண்டும் என்று மகேஷ் ரொம்பவும் உறுதியாக இருக்கிறான்.

அதே நேரத்தில் மகேஷ் எந்தவிதமான கஷ்டமும் இல்லாமல் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என அன்பு ஆசைப்படுகிறான்.

அதனால் தான் ஆனந்தியை இந்த பிறந்தநாள் விழாவிற்கு வரக்கூடாது என்று சொல்கிறான். ஆனால் ஆனந்தி மகேஷ் சாரிடம் நான் உண்மையை சொல்லியே ஆக வேண்டும் என அந்த நிகழ்ச்சிக்கு வருகிறாள்.

அன்புவின் பேச்சை மீறும் ஆனந்தி

ஒரு வேலை ஆனந்தி ஏதாவது ஒரு காரணம் சொல்லி வராமல் இருந்தால் கூட மகேஷ் இந்த திட்டத்தை வேறொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என விட்டிருப்பான்.

ஆனால் ஆனந்தி இந்த நாளில் நான் வந்து அவரிடம் உண்மையை சொல்லியே ஆக வேண்டும் என அடம் பிடிக்கிறாள்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகேஷ் ஆனந்தியை தனியாக கூட்டி வந்து அவள் கையில் ரோஸ் பூ கொடுத்து மண்டியிட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறான்.

ஏற்கனவே வெளியான ப்ரோமோ படி ஆனந்தி அன்புவை காதலிப்பதை சொல்கிறாளா, இல்லை வேறு ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளப் போகிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News