பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளவர்களுக்கு depression வருகிறதோ இல்லையோ, பார்க்கும் நமக்கு நிச்சயமாக வந்துவிடும் போல. நாளுக்கு நாள், TRP-க்காக செய்யும் அத்தோழியங்கள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஆர்.ஜெ.ஆனந்தி மீது அனைவருக்கும் ஒரு நல்ல மதிப்பு இருந்தது. ஆனால் இப்போது, அது கொஞ்சம் கூட இல்லை. அதற்க்கு காரணம் அவரே தான்.
மிகவும் மோசமாக கேம் விளையாடுகிறார். அவரை அவர் save செய்ய இதை செய்தாலும் கூட, இது தான் இவரது சுயரூபமா என்று மக்களுக்கு அவர் மீது ஒரு வெறுப்பு வந்துள்ளது.
பொதுவாக சாச்சனாவும் ஆனந்தியும் கொஞ்சி குலாவுவார்கள். சாச்சனாவை சாச்சு குட்டி என்று எப்போதும் கொஞ்சுவார். ஆனால் டாஸ்க் என்று வந்தபோது, அவர் அப்படியே மாறி விட்டார்.
அது தான் கேம் என்று விட்டாலும் கூட, அவர் செய்த ஒரு செயலை சாச்சனா தற்போது புலம்பி தீர்த்துள்ளார்.
சிறுநீர் கழிக்க விடாமல் டார்ச்சல்..
டெவில் ஏஞ்சல் டாஸ்கில் நேற்றைய தினம், சாச்சனா ஏஞ்சலாகியுள்ளார். மேலும் ஆர்.ஜெ.ஆனந்தி தேவிலாக களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில், சாச்சனா ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணனும் என்று கூறியபோது, அவருடன் ஆனந்தியும் ரெஸ்ட் ரூம் சென்றுள்ளார். அப்போது சாச்சனா.. “அக்கா யாரவது பக்கத்த்துல இருந்தா வராது” என்று கூறியும்.. அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.
சாச்சனாவை provoke செய்வதற்காக ஆனந்தி இதை செய்துள்ளார். ஆனால் அதை புரிந்துகொண்ட சாச்சனா புரிந்து கொண்டு யார் இருந்தால் என்ன என்று சென்ற வேலையை பார்த்துள்ளார்.
அதன் பிறகு தான் ஆனந்தி அந்த இடத்தை விட்டே நகர்ந்திருக்கிறார். இதெல்லாம் worst ஆக உள்ளது என்று வீட்டில் உள்ளவர்களும், வெளியில் பாக்கும் மக்களும் கூறி வருகின்றனர்.
முக்கியமாக ஆனந்தியா இப்படி செய்தது என்று அனைவருக்குமே ஒரு முகசுழிப்பு ஏற்பட்டுள்ளது. TRP-யை ஏற்றுவதற்கு இவ்வளவு கேவலமாவா கேம் விளையாடுவார்கள்.
இதெல்லாம் ஒரு கன்டென்ட் ஆ என்று சலிப்போடு ட்விட்டர் வலைதளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.