வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிங்கப்பெண்ணில் அன்புக்கு நெருக்கடி கொடுக்கும் ஆனந்தி.. இறுதி அத்தியாயத்தை நெருங்கும் அழகனின் காதல்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் நான் தான் அழகன் என அன்பு தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனந்தியுடன் அவள் சொந்த ஊருக்கு போனபோது பேச எவ்வளவோ அன்பு முயற்சி செய்தான்.

ஆனால் சுயம்புலிங்கம் போட்ட சதி திட்டத்தால் அந்த பிரச்சனையில் இருந்து ஆனந்தியை காப்பாற்றவே நேரம் சரியாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அந்த நேரத்தில் தான் மகேஷ் நானும் ஆனந்தியை காதலிக்கிறேன் என அன்பு விடம் சொல்லிவிட்டான்.

இதனால் ரொம்பவே குழம்பி போய் இருந்த அன்பு ஒரு கட்டத்தில் தைரியமாக முடிவெடுத்து நான் தான் அழகன் என்று ஆனந்தியிடம் சொல்லிவிடுவேன் என தைரியமாக இருந்தான். ஆனால் அந்த நேரத்தில் தான் ஆனந்திக்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்படும் அளவுக்கு பெரிய பிரச்சனை வந்தது.

அன்பு எவ்வளவு முயற்சி செய்தும் அவனால் அந்த 10 லட்சத்தை ஆனந்திக்கு கொடுக்க முடியவில்லை. அந்த நேரத்தில் கடவுள் போல் வந்து காப்பாற்றியது மகேஷ் தான். மகேஷ் ஆனந்திக்காக கொடுத்த 10 லட்சம் ரூபாயிலிருந்து அன்புவின் மனது ரொம்ப திண்டாட ஆரம்பித்துவிட்டது.

ஒரு கட்டத்தில் மகேஷ் உடன் இருந்தால்தான் ஆனந்தி சந்தோஷமாக இருப்பாள் என அன்பு முடிவு செய்து விட்டான். அதுமட்டுமில்லாமல் ஆனந்தியின் சந்தோஷத்திற்காக அவளை மகேசுக்காக விட்டுக் கொடுக்கவும் முன் வந்துவிட்டான்.

அன்புக்கு நெருக்கடி கொடுக்கும் ஆனந்தி

மேலும் அன்புவின் அம்மாவும் ஆனந்தியை அன்பு காதலித்து விடுவானோ என்ற பயத்தில் கல்யாணத்திற்கு ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். பல சிக்கல்களுக்கு நடுவே திணறிக் கொண்டிருக்கும் அன்பு ஆனந்தியிடம் இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறான்.

இது ஆனந்திக்கு பெரிய வலியை கொடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆனந்தியை பிரிவதற்கு முடிவெடுத்த அன்பு வேலையை விட்டு நிற்பதற்கும் முடிவு செய்து விட்டான். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அம்மாவிடம் நான் கம்பெனியை விட்டு நிற்கப் போகிறேன் என்று சொல்கிறான்.

அப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டு ரோட்டில் தனியாக நடந்து கொண்டு போயிருக்கும் பொழுது அங்கு ஆனந்தி வருகிறாள். அன்புவை பார்த்து நாளைக்கு நான் கம்பெனிக்கு வருவேன், நீங்க அங்க வந்து அழகன் யாருன்னு சொல்லணும் என்று ரொம்பவே அழுது கொண்டு சொல்கிறாள்.

ஆனந்தியின் இந்த அழுகை அன்புவின் மனதை பாதிக்கிறது. அன்பு எந்த மாதிரியான முடிவு எடுக்கப் போகிறான் என்று இன்றைய எபிசோடில் தான் தெரியும். ஒருவேளை ஆனந்தி கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும், தன்னுடைய காதலை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அன்பு நான் தான் அழகன் என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதைத் தாண்டி அழகன் என்ற மாயபிம்பம் இல்லாமல் அன்புவை மட்டுமே ஆனந்தி நேசிக்கவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நடுவில் மகேஷ் எப்படியாவது அன்பு தன்னை ஆனந்தியுடன் சேர்த்து வைத்து விடுவான் என்று பெரிய அளவில் நம்பிக் கொண்டிருக்கிறான்.

ஒருவேளை ஆனந்தியும், அன்பும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இருப்பது மகேஷுக்கு தெரிய வந்தால் அவனுடைய முடிவு என்னவாக இருக்கும் என்பது பெரிய சந்தேகம் தான். ஆனந்தி கஷ்டப்படுவதை உணர்ந்து அன்பு நான்தான் அழகன் என்று இந்த வாரத்தில் சொல்லி விடுகிறானா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Trending News