வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிங்கப்பெண்ணில் ஆனந்திக்கு அழகனை பற்றி கிடைத்த முக்கிய ஆதாரம்.. மனம் மாறுவானா அன்பு?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அழகனை மீண்டும் கொண்டு வந்து அன்பு மற்றும் ஆனந்தியை ஒட்டுமொத்தமாக மகேஷ் வாழ்க்கையிலிருந்து விரட்ட வேண்டும் என மித்ரா முடிவெடுத்திருக்கிறாள்.

இதனால் அன்புவின் கையெழுத்திலேயே ஆனந்திக்கு அழகன் மாதிரி ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறாள். அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளால் அழகனை பற்றி சிந்திக்க நேரமில்லாத ஆனந்திக்கு இந்த கடிதம் மீண்டும் அந்த காதலை ஞாபகப்படுத்தி இருக்கிறது.

மகேஷ் போன்ற பணக்காரனுடன் வாழ்ந்தால் தான் ஆனந்தி மற்றும் அவளுடைய குடும்பத்திற்கு நன்மை கிடைக்கும் என தன்னுடைய காதலை மறைத்துக் கொண்டு வாழ்கிறான் அன்பு. இந்த நிலையில் தான் ஆனந்தி கையில் கிடைத்த அந்த கடிதம் இருவரின் வாழ்க்கையையுமே திசை திருப்ப காத்திருக்கிறது.

ஆனந்திக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்

நேற்று அந்த கடிதத்தை படித்த பிறகு ஆனந்தி உடனே அழகனை நேரில் பார்த்த ஆட்டோக்காரருக்கு போன் பண்ணுகிறாள். அழகனை தேட வேண்டும் என்று அவரிடம் உதவி கேட்கிறாள். ஆனால் அந்த ஆட்டோக்காரர் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி அன்பு சில நாட்களுக்கு முன் ஆட்டோக்காரரை சந்தித்து பேசிய தெருவின் அட்ரஸ் கொடுக்கிறார்.

அந்த இடத்திற்கு போய் அங்கு இருக்கும் கம்பெனியில் விசாரித்துப் பார் என சொல்கிறார். உடனே ஆனந்தியும் அரை நாள் லீவு கேட்டுக்கொண்டு அந்த இடத்திற்கு போகிறாள். தனக்கு அழகன் என்று மட்டும் தான் தெரியும் என்றும் வேறு எந்த தகவலும் அந்த நபரை பற்றி தெரியாது என்றும், இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கம்பெனிக்கு வந்ததாக ஆட்டோக்காரர் சொன்னது பற்றியும் அந்த கம்பெனியின் இருக்கும் ஒரு பெண்ணிடம் சொல்கிறாள்.

உடனே அந்த பெண்ணும் ஆனந்திக்கு உதவும் எண்ணத்தில் இரண்டு நாட்களுக்கு முன் அந்த கம்பெனிக்கு வந்தவர்களின் விவரத்தை கொடுக்கிறாள். எப்படியும் 100 பேர் கொண்ட புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் இருக்கிறது.

ஆனந்திக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்டோக்காரருக்கு போன் செய்கிறாள். உடனே ஆட்டோகாரரும் நான் காலையிலேயே வருகிறேன் அந்த விண்ணப்பங்களை பார்த்து அழகன் யார் என பார்க்க சொல்கிறேன் என உறுதி கொடுக்கிறார்.

இந்த சம்பவத்தை பற்றி ஆனந்தி அன்புவிடம் சொல்கிறாள். இது அன்புக்கு மிகப்பெரிய கோபத்தை கொடுக்கிறது. எவ்வளவு நாள் இந்த அழகனை நம்பி ஏமாற போறீங்க, ஏற்கனவே அந்த நந்தா வாழ நீங்க பட்ட கஷ்டம் போதாதா, மகேஷ் சாருக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்ன ஆகும் என பயங்கரமாக கோபப்படுகிறான்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி அந்த ஆட்டோ காரரிடம் மொத்த விண்ணப்பங்களையும் காட்டுகிறாள். சரியாக அன்புவின் விண்ணப்பம் வருவதற்கு முன் அந்த இடத்திற்கு வருகிறார்கள் அன்பு மற்றும் மகேஷ் இருவரும் வருவது போல் காட்டப்பட்டு இருக்கிறது. ஆட்டோக்காரர் அழகனை அடையாளம் காட்டுகிறாரா இல்லை வழக்கம் போல் இயக்குனர் தொடர்பு போகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News