சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

சிங்கப்பெண்ணில் சீண்டி விட்ட பார்வதி, சீரிய ஆனந்தி.. அன்புவை அவமானபடுத்தும் மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

என்ன நடக்க வேண்டும் என்று திட்டமிட்டு பார்வதி ஆனந்தியை மருமகளாக ஏற்றுக் கொள்ள சம்மதித்தாரோ, அது கச்சிதமாக நடந்து விட்டது.

தான் முதலாளியாக இருப்பதால்தான் ஆனந்தி தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள் என மகேஷ் நினைக்கிறான்.

அன்புவை அவமானபடுத்தும் மகேஷ்

இனி நாம் காதலர்களாக நெருக்கமாய் இருப்போம் என்று ஆனந்தியிடம் சொல்கிறான். அது மட்டுமில்லாமல் ஆனந்தியை நெருங்க முயற்சி செய்கிறான்.

இது ஆனந்திக்கு மிகப்பெரிய கோபத்தை உண்டு பண்ணுகிறது. இன்னொருத்தருக்கு மனைவியாக போற என் மேல எப்படி கை வைக்கிறீங்க என்று கேட்கிறாள்.

அதற்கு மகேஷ் நீ யாருக்கு மனைவியாக போகிறாய் என்று கேட்கிறான். ஆனந்தி ரொம்பவும் கோபத்தோடு அன்புக்கு தான் நான் மனைவியாக போகிறேன் என்று சொல்கிறாள்.

இதனால் உச்சகட்ட கோபத்திற்கு சென்ற மகேஷ் எல்லோர் முன்னிலையிலும் அன்புவை அடித்து கம்பெனியை விட்டு வெளியே அனுப்புகிறான்.

அன்புக்கு நேர்ந்த இந்த அநீதிக்கு அவனுடைய அம்மா லலிதா என்ன முடிவு எடுக்கப் போகிறார்.

காதலில் கண்முன் தெரியாமல் மிருகமாய் திரியும் மகேஷை வார்டன் மனோன்மணி திருத்துகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News