Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்தே பிரச்சனையும் அவர்களுடன் ஒட்டிக்கொண்டது.
கம்பெனியில் ஆனந்தியை டெய்லர் ஆக்குவதற்கே அன்பு படாத பாடு பட்டான். அந்த சந்தோஷம் நிலைப்பதற்குள் துளசியுடனான நிச்சயதார்த்தம் என்ற பிரச்சனையை ஆரம்பித்தது.
அதை முடிப்பதற்குள் மகேஷ் தன்னுடைய காதலை ஆனந்தியிடம் சொல்லி, அவள் ஏற்கவில்லை என்றதும் மிருகம் போல் மாறினான்.
பிரச்சனையை சமாளிப்பதற்குள்ளையே அன்புவின் அம்மா தலையில் அடிபட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் இருக்கிறார்.
எல்லாம் மகேசுக்கு சாதகம் ஆயிடுச்சே!
இனி அவர் மீண்டு வந்து ஆனந்தியை ஏற்றுக் கொள்வாரா என்பதே பெரிய கேள்விக்குறி தான்.
இந்த நிலையில் இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தியின் ஹாஸ்டல் வார்டன் தன்னுடைய இன்னொரு முகத்தை காட்டியிருக்கிறார்.
வழக்கம் போல தன்னுடைய பீரோவில் இருக்கும் புடவையையும் குழந்தை விளையாடும் பொருளையும் எடுத்து பார்க்கிறார்.
பின்னர் மகேஷ் உனக்கு ஒரு அம்மாவாக நான் எதையுமே செய்யவில்லை. ஆனால் முதல்முறையாக நீ என்னிடம் ஆசைப்பட்டு ஒரு விஷயத்தை கேட்டிருக்கிறாய்.
கண்டிப்பாக ஆனந்தியை உன்னுடன் சேர்த்து வைக்கிறேன் என சொல்கிறார்.
இருக்கும் பிரச்சனையில் வார்டன் மகேஷின் காதலுக்கு சப்போர்ட் பண்ணுவதால் புது பிரச்சனை என்ன வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.