சனிக்கிழமை, மார்ச் 1, 2025

மகேஷ் தான் என் பையன், ரகசியத்தை உடைத்த வார்டன்.. பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் பரபரப்பான பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு நாள் சீரியல் பார்த்தவருக்கு ஆனந்தியின் ஹாஸ்டல் வார்டன் மனோன்மணி தான் மகேஷின் அம்மா என்பது தெரியும்.

ஆனால் இவர்களுக்குள் என்ன நடந்திருக்கும், பார்வதி மற்றும் தில்லைநாதன் யார் என்ற பிளாஷ்பேக் தெரிந்து கொள்ள எல்லோருமே அதிக ஆர்வம் காட்டி வந்தார்கள்.

ரகசியத்தை உடைத்த வார்டன்

இந்த நிலையில் நேயர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல இருக்கிறார் இயக்குனர். நேற்றைய எபிசோடில் அன்புவை கொலை செய்யும் அளவுக்கு மகேஷ் துணிந்து விட்டான்.

அதன் பின்னர் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்ட மகேஷ் மனநோயாளி போல் நடந்து கொண்டது அங்கே இருக்கும் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அன்பு மற்றும் ஆனந்த் இருவரும் அன்பின் அம்மாள் லலிதாவிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்கிறார்கள். லலிதா ஒரே முடிவாக நீங்கள் இரண்டு பேருமே இனிமேல் அந்த கம்பெனிக்கு போக வேண்டாம் என்று சொல்கிறார்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஹாஸ்டல் வார்டன் மனோன்மணி அன்பு வீட்டிற்கு வந்து லலிதாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

மகேஷ் செஞ்சதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க நீங்க ஏன் மன்னிப்பு கேக்குறீங்க என்று லலிதா கேட்கிறார். அதற்கு மனோன்மணி மகேஷ் என்னோட பையன் என்று சொல்கிறார்.

மனோன்மணி தன்னுடைய பிளாஷ்பேக் பற்றி எப்போது சொல்வார் என எல்லோருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் அடுத்த வாரத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் ரசிகர்களின் ஒட்டுமொத்த கேள்விக்கும் பதிலாக எபிசோடுகள் ரெடியாகி கொண்டிருக்கின்றன.

Trending News