வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சிங்கப்பெண்ணில் அன்புவிடம் நெருங்கும் ஆனந்தி, காதலை வெளிப்படுத்தும் மகேஷ்.. அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கும் மித்ரா!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு வீட்டில் இருந்து ஆனந்தி மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து விடுவாளா, இல்லை அன்பு அம்மா இவர்கள் இரண்டு பேரும் ஏமாற்றுவதை கண்டுபிடித்து விடுவாரா என்பது இப்போது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் வார்டனிடம் என்ன நடந்தது என்பதை சொல்லி ஆனந்தி மீண்டும் ஹாஸ்டலுக்கு போவாளா என்பதுதான் இப்போது பெரிய கேள்வி. மேலும் அன்புவின் வீட்டில் ஆனந்தி இருக்கும் இந்த நாட்களில் அவனை ரொம்பவும் அதிகமாகவே புரிந்து கொள்கிறாள்.

ஒரு கட்டத்தில் அழகனையே மறந்து ஆனந்தி அன்புவை காதலிப்பதற்கு கூட தற்போது நடக்கும் நிகழ்வுகள் வாய்ப்பாக அமையும். கடந்த வார எபிசோடுகளில் மகேஷின் அம்மா ஆனந்தி மகேஷிடம் பேசுவதையும், மகேஷ் ஆனந்திக்கு உதவுவதையும் கண்டுபிடித்து விடுகிறார்.

அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கும் மித்ரா!

இதனால் மகேஷிடம் ஆனந்தி இனிமேல் கம்பெனியில் வேலை பார்க்கக் கூடாது என்று சொல்கிறார். ஆனால் மகேஷ் ஆனந்தி இல்லை என்றால் நானும் இருக்க மாட்டேன் என சொல்லி விடுகிறான். இது அவனுடைய அம்மாவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அது மட்டுமில்லாமல் அன்புவை மீண்டும் கம்பெனிக்குள் கொண்டு வருவேன் என மித்ரா மற்றும் கருணாகரனிடம் சவால் விடுகிறான் மகேஷ். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்புவின் அம்மாவுக்கு ஏதோ சந்தேகம் வந்தது போலவும் அன்புவின் அறையை சோதனை செய்ய வேண்டும் எனவும் சொல்வது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் மித்ராவுக்கு மகேஷின் அம்மா போன் பண்ணி ஆனந்தியை பற்றி நான் மகேஷிடம் பேசும் பொழுது அவன் ஏதோ சொல்ல முயற்சி செய்தான். ஆனால் எதுவுமே சொல்லவில்லை, உனக்கு ஏதும் தெரியுமா என கேட்கிறார். இது மித்ராவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது.

ஒருவேளை மகேஷ் ஆனந்தியை காதலிப்பதை பற்றி அவன் வீட்டில் சொல்லி அவர்கள் மித்ராவின் பயமாக இருக்கிறது. மேலும் ஆனந்தி அன்புவிடம் ஏன் நான் எந்த தப்பு பண்ணாலும் என் மேல கோபப்பட மாட்டேங்கிறீங்க என கேட்கிறாள்.

அன்புவின் வீட்டில் தங்கியிருக்கும் இந்த சில நாட்களில் ஆனந்தி அன்புவை ரொம்ப புரிந்து கொள்கிறாள். இதனால் இவர்களுக்குள் நெருக்கமும் அதிகரிக்கிறது. இந்த நெருக்கம் எங்கு கொண்டு போய் முடிகிறது, ஆனந்தி அன்பு வீட்டை விட்டு எப்படி வெளியேறுகிறாள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News