சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சிங்க பெண்ணில் ஆனந்திக்கு கிடைத்த துருப்பு சீட்டு.. கையும் களவுமாக மாட்டப்போகும் மித்ரா, கருணாகரன்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே பரபரப்பாக பற்றிக் கொண்டது. மயக்கம் போட்டு கீழே விழுந்த ஆனந்தியை அவளுடைய அண்ணன் மருத்துவமனையில் சேர்த்திருந்தான்.

மருத்துவமனை பில்லை கட்டி விட்டு வார்டனுக்கும் போன் பண்ணி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு போய்விட்டான். ஆனந்தி மருத்துவமனையில் அனுமதித்திருப்பதை அறிந்து கொண்டு வார்டன், அவளுடைய தோழிகள், அன்பு மற்றும் மகேஷ் என எல்லோருமே வந்துவிட்டார்கள்.

ப்ரோமோவில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக நர்ஸ் சொல்லுவது போல் காட்டப்பட்டாலும் எபிசோடில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. கூட வேலை செய்யும் இன்னொரு பெண்ணிடம் இந்த பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்று அந்த நர்ஸ் சொல்வது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

கொஞ்ச நேரத்தில் ஆனந்திக்கு மயக்கம் தெளிந்ததும் அவளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து விடுகிறார்கள். ஹாஸ்டலுக்கு வரும் ஆனந்திக்கு இரவில் பார்ட்டியின் போது அவளுக்கு நடந்த சம்பவங்கள் எல்லாம் ஞாபகம் வருகிறது.

அவளுக்கு திடீரென மயக்கம் வந்தது, அவளை தண்ணீரில் அழுத்தி கொலை செய்ய முயற்சி செய்தது என அத்தனையும் கனவில் ஞாபகம் வருகிறது. அது மட்டுமல்லாமல் மகேஷ் அந்த பெட்ரூமுக்கு வந்து அவள் பக்கத்தில் படுப்பது முதற்கொண்டு ஞாபகம் வருகிறது.

கையும் களவுமாக மாட்டப்போகும் மித்ரா, கருணாகரன்

ஆனால் அவளுக்கு மகேஷின் முகம் மட்டும் ஞாபகத்துக்கு வரவில்லை. ஆனால் ஆனந்தி அந்த பார்ட்டியில் தன்னை யார் கொல்ல முயற்சி செய்தார்களோ அவர்கள்தான் குடோனுக்குள் வைத்து பூட்டி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள்.

கம்பெனியில் தனக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளும் ஆனந்தி வேலையை விட்டுவிட்டு ஊருக்கு செல்வதாக முடிவு எடுக்கிறாள். அதை வார்டனிடம் சொல்லும்போது, வார்டன் குடோனுக்குள் நீயும் அன்புவும் இருந்தது, அது தற்செயலாக நடந்தது தான் என நிரூபித்து விட்டு ஊருக்கு போ என்று சொல்கிறார்.

இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி அன்புவிடம் யார் இந்த வேலையை செய்தார்கள் என நான் கண்டுபிடித்து விட்டேன் என கோபமாக சொல்கிறாள். அதே நேரத்தில் முத்து அன்பு விடம் ஆனந்தியை மேலும் கஷ்டப்படுத்தாமல் நீ தான் அழகன் என்று சொல்லிவிடு என சொல்கிறான்.

முத்துவின் பேச்சை கேட்டு அன்பு, அழகன் யார் என்பதை சொல்வானா, ஆனந்தி மித்ராவின் உண்மை முகத்தை கண்டுபிடிப்பாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Trending News