ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

அப்பாவுக்காக மகேஷை திருமணம் செய்ய சம்மதிக்கும் ஆனந்தி, விட்டு விலகும் அன்பு.. பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியலில் அடுத்த வாரம் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட இருக்கிறது.

அன்பு மற்றும் ஆனந்தி தங்களுடைய காதலை வெளியில் சொல்ல முடியாதபடி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மகேஷிடம் சொன்னால் அவன் மிருகம் போல் மாறிவிடுவான் என்று ஆனந்தி பயப்படுகிறாள். அவள் கையில் எடுத்த கடைசி அஸ்திரம் தான் அவளுடைய அண்ணன் வேலு.

மகேஷை திருமணம் செய்ய சம்மதிக்கும் ஆனந்தி

உண்மையை சொல்ல போனால் வேலு செய்த காதல் திருமணத்தால் தான் ஆனந்தி குடும்பம் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அப்படி இருக்கும்போது மீண்டும் ஒரு காதலை பற்றி வேலு அழகப்பன் இடம் பேச வாய்ப்பே இல்லை. அதிலும் குடும்ப கவுரவத்திற்காக அழகப்பன் மகேஷுக்கு கொடுத்த வாக்கை தான் காப்பாற்ற நினைப்பார்.

இதனால் ஆனந்தி தன்னுடைய அப்பாவுக்காக மகேஷ் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க இருக்கிறாள்.

அதே நேரத்தில் ஆனந்தி கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அன்பும் தன்னுடைய காதலில் இருந்து விலகி விடுகிறான்.

இனி நாம் ஏற்கனவே சொன்னது போல மகேஷ் இவர்களின் காதலை புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்தால் மட்டும்தான் அழகனின் காதல் ஜெயிக்கும். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News