Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் இந்த வாரம் நந்தா கொலை வழக்கு பரபரப்பாக போனது. என்னதான் ஆனந்தி நிரபராதியாக விடுவிக்கப்பட்டாலும், அதற்கு அடுத்து நடக்கும் சம்பவங்கள் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
எப்படியாவது ஆனந்தி இந்த வழக்கில் சிக்கி விட வேண்டும் என மித்ரா ரொம்பவே எதிர்பார்த்தால். ஆனால் கடைசி நேரத்தில் அன்பு உள்ளே நுழைந்து உண்மையான குற்றவாளியை போலீசில் சரணடைய வைத்தான். இதைத் தொடர்ந்து ஹாஸ்டலுக்கு வந்த ஆனந்திக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆனந்தியை தனியறையில் தங்க வைத்தது மட்டுமில்லாமல், அவளுடைய தோழிகளிடம் பேசக்கூடாது என வார்டன் உத்தரவு போட்டு இருக்கிறார். மேலும் தனக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்தும் அழகன் தன்னை பார்க்க வரவில்லையே என்ற கவலை ஆனந்திக்கு அதிகரித்துவிட்டது.
தப்பான முடிவு எடுக்கும் ஆனந்தி
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி தன்னுடைய தவறை நினைத்து வருந்துகிறாள். நந்தா நான் தான் அழகன் என்று வந்து சொன்னபோது இதை வெளியில் சொல்லி இருந்தால் எனக்கு இவ்வளவு பிரச்சனை இல்லை என்று சொல்லி தன்னுடைய நண்பர்களிடம் புலம்புகிறாள்.
அழகனால் தான் தனக்கு இவ்வளவு பிரச்சனை என்று ஆனந்திக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதே நேரத்தில் மகேஷ் இனிமேல் ஆனந்திக்கு எந்த பிரச்சனையும் வராமல் அவளை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ளப் போகிறேன் என்று அவனுடைய அப்பாவிடம் சொல்கிறான்.
மேலும் ஆனந்தியின் மனதில் இடம் பிடிக்க மகேஷ் அடுத்து என்னவெல்லாம் செய்யப் போகிறான் என்பது அடுத்த வாரம் எபிசோடுகளில் தான் தெரியும். ஆனந்தி அழகன் என்ற கேரக்டரால் கஷ்டப்பட்டதை உணர்ந்து அன்பு உன்னுடைய கஷ்டத்தை எல்லாம் போக்கி நான்தான் அழகன் என்று சொல்லி உன்னை கரம் பிடிப்பேன் என முடிவு எடுக்கிறான்.
இது ரொம்பவும் காலதாமதமாக எடுக்கப்படும் முடிவு போல தெரிகிறது. அன்பு நேரடியாக வந்து நான்தான் அழகன் என்று சொன்னாலும் ஆனந்தி அதை ஏற்றுக் கொள்ள மாட்டாள். அழகனால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையால் அவள் அழகனையே வெறுக்க ஆரம்பித்திருக்கிறாள்.
மற்றும் ஒரு காரணம் அழகன் ஆனந்திக்கு எப்படிப்பட்ட உதவிகள் செய்தாலும் அவள் அவனின் உண்மையான அன்பை எப்போதுமே புரிந்து கொண்டது கிடையாது. இனிவரும் வாரங்களில் மகேஷின் நடவடிக்கையால் அன்பு நொந்து போவது உறுதி.
சிங்கப்பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்
- சிங்க பெண்ணே சீரியலுக்கு விழுந்த பெரிய அடி
- சிங்கப்பெண்ணில் அன்புவிடம், ஆனந்தி கேட்ட அந்த ஒரு கேள்வி
- ஆட்டம் கண்டு போன மித்ரா